ஓய்வுக்கு பிறகும் அசத்தல்.. ரஞ்சி கோப்பையில் கர்நாடகாவுக்கு எதிராக ஷேவாக் அதிரடி சதம்

மைசூர்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வீரேந்திர ஷேவாக், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில் அதிரடியாக சதம் கடந்து அசத்தியுள்ளார். தொடர்ச்சியாக அவர் ரஞ்சியில் சிறந்த பங்களிப்பை அளித்துவரும் நிலையில், இன்றைய போட்டியிலும் அசத்தியுள்ளார்.

ஹரியானா அணிக்காக ரஞ்சி போட்டிகளுக்காக ஆடிவருகிறார் வீரேந்திர ஷேவாக். ஓய்வு முடிவை அறிவித்த பிறகு மைசூரில் நடைபெறும், கர்நாடகாவுக்கு எதிராக இன்று, தொடங்கிய போட்டியிலும் ஷேவாக் ஆடிவருகிறார். இப்போட்டியில் அவர் சதம் கடந்துள்ளார்.

119 பந்துகளில், 3 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் உதவியுடன், ஷேவாக் 100 ரன்களை கடந்தார்.

முன்னதாக, ஹரியானாவின் முதல் போட்டியில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 92 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லிக்கு எதிரான போட்டிகளில், 37 மற்றும் 51 ரன்களை எடுத்தார். இந்நிலையில் கர்நாடகாவுக்கு எதிராகவும் அவர் அரை சதம் கடந்து நல்ல ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

60 sec: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வீரேந்திர ஷேவாக், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில் அதிரடியாக சதம் கடந்து அசத்தியுள்ளார். தொடர்ச்சியாக அவர் ரஞ்சியில் சிறந்த பங்களிப்பை அளித்துவரும் நிலையில், இன்றைய போட்டியிலும் அசத்தியுள்ளார்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
The 37-year-old Virender Sehwag has blasted his way to a sparkling half-century against Karnataka.
Story first published: Thursday, October 22, 2015, 12:57 [IST]
Other articles published on Oct 22, 2015
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X