“உங்க வாய்தான் உங்களுக்கு எமன்” வெற்றி உறுதி எனக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த சேவாக்

அமீரகம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுவது குறித்து முன்னாள் வீரர் சேவாக் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று போட்டிகள் ஓமனிலும், சூப்பர் 12 போட்டிகள் அமீரகத்திலும் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 8 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று அதில் இருந்து

இந்திய அணியின் ப்ளேயிங் 11... இறுதியாக வாய்த்திறந்த ரவி சாஸ்திரி.. எல்லாமே அதைப் பொறுத்துதான்? இந்திய அணியின் ப்ளேயிங் 11... இறுதியாக வாய்த்திறந்த ரவி சாஸ்திரி.. எல்லாமே அதைப் பொறுத்துதான்?

ஐசிசி திட்டம்

ஐசிசி திட்டம்

இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 24ம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரை ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புடன் கொண்டு செல்ல இந்த ப்ளானை ஐசிசி போட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்னைகள் காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டும் தான் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன.

பாகிஸ்தானின் பேச்சு

பாகிஸ்தானின் பேச்சு

நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதுவதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டி குறித்து கடந்த சில தினங்களாக பேசி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் ஆகியோர் இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடுவோம், இந்த முறை இந்தியாவை வெல்வது சுலபம் தான் எனத்தெரிவித்து வருகின்றனர்.

சேவாக் கொடுத்த பதிலடி

சேவாக் கொடுத்த பதிலடி

இந்நிலையில் சேவாக் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானை விட இந்திய அணி உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் யாரும் அதிகம் வாய் பேசமாட்டார்கள். பாகிஸ்தான் அணியில் எப்போதுமே போட்டிக்கு முன்னதே வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். நாங்கள் வரலாற்றை மாற்றப்போகிறோம், வீழ்த்தப்போகிறோம் எனக் கூறிக்கொள்வார்கள். ஆனால் முடிவு வேறு மாதிரி இருக்கும்.

முடிவுகள் தெரியும்

முடிவுகள் தெரியும்

2011 மற்றும் 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை எடுத்துக்கொண்டால், பாகிஸ்தானை விட இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்தது. இங்கு வீரர்கள் பேசுவதை விட போட்டிக்கு தயாராவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் இந்திய அணி ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்கான முடிவுகளையும் நாம் பார்த்து வருகிறோம்.

பாகிஸ்தானின் சோக நிலைமை

பாகிஸ்தானின் சோக நிலைமை

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் சூழலை வைத்துப்பார்த்தால் பாகிஸ்தான் அணிக்கும் சம வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் டி20 வடிவ கிரிக்கெட்டில் ஒரு வீரர் கூட ஆட்டத்தை மாற்றலாம். எனினும் இதனையாவது பாகிஸ்தான் செய்யுமா என்பதில் சந்தேகமே உள்ளது. வரும் 24ம் தேதி என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என சேவாக் தெரிவித்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sehwag gives a epic reply for reason behind India’s dominating record against Pakistan
Story first published: Wednesday, October 20, 2021, 13:11 [IST]
Other articles published on Oct 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X