For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டை கண்டுபிடிச்ச நீங்க... உலகக் கோப்பையை ஜெயிச்சீங்களா.. ஷேவாக் கொடுத்த பளார் பதில்!

By Siva

சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் 2 பதக்கங்களை வென்றதற்காக இந்தியா அதை கொண்டாடுவது அவமானம் என ட்விட்டரில் தெரிவித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் 2 பதக்கங்களை பெற்றதற்காக இந்தியர்கள் அதை கொண்டாடுவது அவமானப்பட வேண்டியது என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மாரக்ன் ட்விட்டரில் திமிராக தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டை பார்த்த இந்தியர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து ட்வீட் போட்டுள்ளனர்.

சேவாக்

நாங்கள் அனைத்து சிறிய சந்தோஷங்களையும் கொண்டாடுவோம். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை உலகக் கோப்பை வாங்கவில்லை. இன்னும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு அவமானமானது? என சேவாக் மார்கனை நறுக்கென்று கேட்டுள்ளார்.

முட்டாள்தனம்

இந்த விவகாரத்தை பற்றி பேசியதற்காக நன்றி பியர்ஸ் மார்கன். ஆனால் ஒரு பதக்கத்திற்கு 7 மில்லியன் டாலர் செலவு செய்வது முட்டாள்தனம்.

தெரியாது

90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்த பியர்ஸ் மார்கன் யார் என்றே தெரியாது.

டாடா

இங்கிலாந்தில் அதிகமானோருக்கு வேலை அளிக்கும் டாடா ஒரு இந்திய நிறுவனம். அது எவ்வளவு பெரிய அவமானம் பியர்ஸ் மார்கன்?

உண்மை

1966ம் ஆண்டு மட்டும் தான் நீங்கள் ஃபீஃபா உலகக் கோப்பை வென்றீர்கள். அப்புறம் இபிஎல் எதற்கு? கிரிக்கெட்டில் ஒரு முறை கூட உலகக் கோப்பை வெல்லவில்லை பியர்ஸ் மார்கன்... உண்மை.

Story first published: Thursday, August 25, 2016, 15:36 [IST]
Other articles published on Aug 25, 2016
English summary
Tweeples are giving befitting reply to UK journalist Piers Morgan who insulted us for celebrating 2 olympic medals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X