For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா பண்ணுவாங்க? மேட்ச்சில் ஆடி அசைந்து சேவாக் செய்த காரியம்.. ஷாக் ஆன ரசிகர்கள்!

மும்பை : இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சேவாக் ரன் அவுட் ஆன விதம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

Recommended Video

Road Safety T20 series | IND vs SL | Irfan Pathan helps made India Legends to win

முன்னதாக சச்சின் டக் அவுட் ஆகி இருந்த நிலையில், சேவாக்க்கும் பொறுப்பற்ற முறையில் ஆடி ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் பந்துவீச்சின் போது இலங்கை அணி தொடர்ந்து இந்திய ஜாம்பவான் வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. மும்பை : இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சேவாக் ரன் அவுட் ஆன விதம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

முன்னதாக சச்சின் டக் அவுட் ஆகி இருந்த நிலையில், சேவாக்க்கும் பொறுப்பற்ற முறையில் ஆடி ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் பந்துவீச்சின் போது இலங்கை அணி தொடர்ந்து இந்திய ஜாம்பவான் வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது.

சாலை பாதுகாப்பு தொடர்

சாலை பாதுகாப்பு தொடர்

சாலை பாதுகாப்பு உலக டி20 தொடர் இந்தியாவில், மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரின் லீக் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதின.

சச்சின் டாஸ் வெற்றி

சச்சின் டாஸ் வெற்றி

இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். சேஸிங் செய்வது எளிதாக இருக்கும் என கணித்தார் அவர். ஆனால், இந்திய அணிக்கு சேஸிங் எளிதாக இல்லை என்பதே உண்மை.

இலங்கை அணி பேட்டிங்

இலங்கை அணி பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சுமாராகவே ஆடியது. அந்த அணியின் கேப்டன் திலகரத்னே தில்ஷன் 23 ரன்களும், காபுகேத்ரா 23 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். கலுவிதரானா 21 ரன்கள் எடுத்தார்.

அதிர்ச்சி மட்டுமே!

அதிர்ச்சி மட்டுமே!

மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணி எளிதாக இந்த இலக்கை எட்டும் என ரசிகர்கள் நம்பினர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது.

பெரிய எதிர்பார்ப்பு

பெரிய எதிர்பார்ப்பு

இந்தப் போட்டியில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங் ஆகிய மூவர் மீது தான் இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் மூவரும் தாங்கள் ஆடிய காலத்தில் ஆடிய அதிரடி ஆட்டங்கள் ரசிகர்கள் கண் முன் வந்து போனது.

மோசமான ரன் அவுட்

மோசமான ரன் அவுட்

ஆனால், சச்சின் டக் அவுட் ஆனார். யுவராஜ் சிங் 1 ரன் மட்டுமே எடுத்தார். இவர்கள் இருவரையும் சமிந்தா வாஸ் தன் சாதூர்ய வேகப் பந்துவீச்சால் வீழ்த்தினார். இவர்களுக்கு இடையே சேவாக் மோசமான முறையில் ரன் அவுட் ஆனது அதிர்ச்சி அளித்தது.

முகமது கைப்

முகமது கைப்

3வது ஓவரின் கடைசி பந்தை வாஸ் வீசினார், முகமது கைப் மிட் விக்கெட் திசையில் சந்தனா அருகே தட்டி விட்டார். இந்த நிலையில், எளிதாக ஒரு ரன் ஓடும் வாய்ப்பு இருந்தது. மறு முனையில் இருந்த சேவாக் வேகமாக ஓடி வந்தார்.

சேவாக் செய்த காரியம்

சேவாக் செய்த காரியம்

முகமது கைப் எந்த சிக்கலும் இல்லாமல் கிரீஸை எட்டினார். ஆனால், வேகமாக ஓடி வந்த சேவாக் கிரீஸ் அருகே வந்த போது வேகத்தை குறைத்தார். பேட்டையும் கீழே வைத்து, கிரீஸை தொட முயற்சி செய்யவில்லை.

அது நடந்தது

அது நடந்தது

இந்த இலங்கை வீரர்கள் எங்கே நேரடியாக த்ரோ செய்து தம்மை அவுட் ஆக்குவார்கள்? என நினைத்தாரோ என்னவோ.. ஆனால், அது நடந்தது. சந்தனா நேரடியாக அடித்து, அதிரடி சேவாக்கை 3 ரன்களில் ரன் அவுட் செய்தார்.

வாயடைத்துப் போன ரசிகர்கள்

வாயடைத்துப் போன ரசிகர்கள்

அதைக் கண்ட ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். இப்படியுமா ஒருவர் வேகமாக ரன் ஓடி, பின் ரன் அவுட் ஆவார் என அதிர்ச்சி அடைந்தனர். முதல் போட்டியில் தன் அதிரடி ஆட்டத்தால் வெற்றி தேடித் தண்டதந்த சேவாக் இந்த முறை அணியை கைவிட்டார்.

Story first published: Wednesday, March 11, 2020, 11:06 [IST]
Other articles published on Mar 11, 2020
English summary
Sehwag run out make fans to stun in Road Safety T20 match. He was lazy to run and got out.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X