For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் அணியின் சச்சின் யார் தெரியுமா? சேவாக் சொல்லும் புது தகவல்

டெல்லி : சேவாக் தான் அளித்த பேட்டியில் பாகிஸ்தான் அணியின் சச்சின் போன்ற வீரர் என ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.

சச்சின், சேவாக் இணைந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக நீண்ட காலம் இருந்தனர். சச்சின், கங்குலி துவக்க ஜோடிக்கு பின் சிறந்த துவக்கம் அளித்த ஜோடி சச்சின், சேவாக் மட்டுமே.

இந்த நிலையில், சச்சின் போன்ற பாகிஸ்தான் வீரர் என சேவாக் சொல்லி இருப்பது ஆச்சரியத்தை கூட்டியுள்ளது.

அப்ரிடி பற்றி விவாதம்

அப்ரிடி பற்றி விவாதம்

சேவாக் கூறி இருப்பது இது தான். "என் முதல் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு முன் அணியில் இருந்த அனைவரும் அப்ரிடி பற்றித் தான் பேசினார்கள். அவர் பாகிஸ்தான் அணியின் சச்சின் போல நாங்கள் அவரை பற்றி விவாதித்தோம்" என கூறினார் சேவாக்.

அப்ரிடி - சச்சின் வேறு வேறு

அப்ரிடி - சச்சின் வேறு வேறு

சேவாக், அப்ரிடி சச்சின் போன்றவர் என கூறவில்லை. பாகிஸ்தான் அணியில் அப்ரிடி சச்சின் போல இருந்தார் என கூறி இருக்கிறார். எனினும், அப்ரிடி தன் துவக்க காலத்தில் பேட்டிங்கில் காட்டிய அதிரடியை பின்னாட்களில் குறைத்து விட்டார். பல போட்டிகளில் அவர் சொற்ப ரன்களில் வெளியேறினார். எனினும், சுழற்பந்துவீச்சில் கலக்கி அதில் முன்னணி வீரராக சில ஆண்டுகள் வலம் வந்தார் அப்ரிடி.

இரு நாடுகள் பேசணும்

இரு நாடுகள் பேசணும்

மேலும், சேவாக் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் தற்போது அதிகம் நடைபெறாதது பற்றியும் கூறினார். "ஒவ்வொரு இந்தியனும், பாகிஸ்தானியும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்புகிறார்கள். இரண்டு நாட்டின் அரசுகளும் பேசி, இந்த போட்டிகளை மீண்டும் நடைபெற வைக்கும் என நம்புவோம்" என கூறினார் சேவாக்.

சேவாக் மலரும் நினைவுகள்

சேவாக் மலரும் நினைவுகள்

சேவாக் தன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அனுபவம் பற்றி பேசிய போது, "முல்தான் மைதானத்தில் அடித்த முச்சதம், கொச்சியில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் ஆகியவை என்னால் மறக்க முடியாதவை" என கூறினார்.

Story first published: Monday, October 8, 2018, 17:37 [IST]
Other articles published on Oct 8, 2018
English summary
Sehwag says Afridi in pakistan team is like Sachin in Indian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X