For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி கேப்டன் ஆனதே கங்குலியின் தியாகத்தால்தான் ...... சேவாக் பகீர் கருத்தால் சர்ச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோணி உயர்ந்ததற்கு கங்குலி செய்த தியாகம் தான் காரணம் என சேவாக் தெரிவித்த கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.

By Shyamsundar

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டோணி உயர்ந்ததற்கு கங்குலி செய்த தியாகமும் , அவர் காட்டிய கருணையும் தான் காரணம் என சேவாக் கூறியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்தியா டிவி சேனலுக்கு சேவாக் அளித்த பேட்டியில் இந்திய அணியின் தேர்வு முறை, முன்னாள் வீரர்களின் செயற்பாடு என பலவற்றைப் பற்றி விரிவாக பேசினார். அணியில் இப்போது இருக்கும் வீரர்கள் எப்படி அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர், அவர்களின் செயற்பாடு முன்னாள் வீரர்களால் மேம்படுத்தப்பட்டது எப்படி என நிறைய தகவல்களை அவர் அந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

 டோணியை உருவாக்கிய கங்குலி

டோணியை உருவாக்கிய கங்குலி

இந்தப் பேட்டியில் டோணியின் தேர்வு குறித்து சேவாக் கூறியதாவது: அவரை அணியில் சேர்த்ததே கங்குலி தான். டோணி அணியில் விளையாட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டியதும் கங்குலிதான். கங்குலி இந்த வாய்ப்பை அளிக்கவில்லை எனில் டோணி இவ்வளவு உயர்ந்து இருக்க முடியாது.

 டோணி வளர்ந்தது

டோணி வளர்ந்தது

அணியில் அறிமுகம் ஆகி சில நாட்களிலேயே டோணி நன்றாக விளையாடத் தொடங்கினார். பாகிஸ்தானுக்கு எதிராக 148, இலங்கைக்கு எதிராக 183 என வரிசையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவரின் திறமையப் பார்த்த கங்குலி , டோணிக்காக அணியில் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்தார் .

 டோணிக்காக விட்டுக் கொடுத்தவர்

டோணிக்காக விட்டுக் கொடுத்தவர்

அணியின் பின்வரிசையில் ஆடிக் கொண்டிருந்த டோணியை முன் வரிசைக்கு மாற்றியதும் கங்குலிதான். டோணிக்கு நிறைய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் கங்குலி தான் விளையாடிக் கொண்டிருந்த மூன்றாவது இடத்தை விட்டுக்கொடுத்தார். மூன்றாவது இடத்தில் விளையாடியதன் மூலம் மட்டுமே டோணி இன்று இந்த நிலைமையை அடைந்து இருக்கிறார்.

 டோணியால் கேப்டன் பதவியை இழந்தார்

டோணியால் கேப்டன் பதவியை இழந்தார்

2005 ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து கங்குலி வெளியேறிய பின் டிராவிட் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது அவர் இந்திய அணியில் செய்த மாற்றத்தை யாராலும் மறக்க முடியாது. டிராவிட்டின் கேப்டன் பதவி இளம் வீரரான டோணிக்கு வழங்கப்பட்டது. டிராவிட்டும், கங்குலியும் அப்படி தியாகத்துடன் விட்டுக் கொடுக்கவில்லை எனில் டோணியால் கேப்டன் ஆகியிருக்க முடியாது. இவ்வாறு சேவாக் கூறினார். சேவாக்கின் இந்த கருத்து சர்ச்சையாகி உள்ள்ளது.

Story first published: Sunday, October 8, 2017, 14:19 [IST]
Other articles published on Oct 8, 2017
English summary
Sehwag told ti the media that, dhoni got chance because of ganguly. He added that ganguly sacrificed lot of things for dhoni and for new players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X