கூல் மனிதரா? அவரா?.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த சேவாக்!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், எம்.எஸ்.தோனியை கடுமையாக திட்டியதாக சேவாக் கூறியுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ராகுல் டிராவிட் நடிப்பில் உருவாகியுள்ள தொலைக்காட்சி விளம்பரம் சமீபத்தில் வெளியானது. அதில் இதுவரை யாரும் காணாத வகையில், டிராவிட் மிகவும் கோபக்காரராக தோன்றியிருந்தார்.

விமர்சனம் செஞ்சவங்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துருக்காரு சின்ன தல... ஆகாஷ் சோப்ரா பாராட்டு

இந்நிலையில் நிஜ வாழ்விலும் டிராவிட் கோபத்துடன் இருந்ததாகவும், அந்த கோபம் எம்.எஸ்.தோனி மீதுதான் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த 2012ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

விளம்பரம்

விளம்பரம்

இவர் தற்போது கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்தும் க்ரெட் என்ற இணையதள விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்திய ரசிகர்களால் மிகவும் பொறுமையானவர் என அறியப்பட்ட டிராவிட், இந்த விளம்பர படத்தில் மிகவும் கோபக்காரர் போல நடித்துள்ளார். மேலும் காரில் இருந்து சாலையில் செல்வோர்களை திட்டுவது, பேட்டை வைத்து கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

தோனியிடம் கோபம்

தோனியிடம் கோபம்

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ராகுல் டிராவிட் கோபமாக இருந்ததை நான் பார்த்துள்ளேன். ஒரு முறை இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது எம்.எஸ்.தோனி இளம் வீரராக அணியில் இருந்தார். அவர் போட்டியின் போது அவசரப்பட்டு தூக்கி அடித்து கேட்ச்சாகி வெளியேறினார். இதனால் கோபம் அடைந்த டிராவிட், தோனியிடம் இப்படிதான் விளையாடுவாயா? நீ களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துவிட்டு வரவேண்டும். எதற்கு தூக்கி அடித்தாய் என ஆங்கிலத்தில் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

தோனியின் பக்குவம்

தோனியின் பக்குவம்

இதனையடுத்து தோனி அடுத்த போட்டியில் பெரியளவில் அதிரடியாக ஆடி நான் பார்க்கவில்லை. இதற்கான காரணம் குறித்து தோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், நான் டிராவிட்டிடம் மீண்டும் திட்டுவாங்க விரும்பவில்லை. ஆட்டத்தை முடித்துகொடுத்துவிட்டு போக நினைக்கிறேன் எனக்கூறியதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sehwag shares the Incident that Rahul Dravid lost cool on young MS Dhoni
Story first published: Sunday, April 11, 2021, 15:09 [IST]
Other articles published on Apr 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X