For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்!

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அடுத்ததாக இங்கிலாந்து அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 5ம் தேதி முதல் 3 வடிவங்களிலும் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

புஜாரா ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. பரபரப்பு! புஜாரா ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. பரபரப்பு!

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான இந்திய அணியை இன்று தேர்வாளர்கள் இறுதி செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த சுற்றுப்பயணத்தை இந்தியா நிறைவு செய்யவுள்ளது. இறுதி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா ஆடிவருகிறது. இந்த தொடரின் வெற்றியை இறுதி செய்யும் போட்டி இது.

5ம் தேதி போட்டிகள் துவக்கம்

5ம் தேதி போட்டிகள் துவக்கம்

இந்நிலையில் இதையடுத்து இந்தியாவில் இங்கிலாந்து அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவங்களிலும் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளனர். இந்த போட்டி வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இந்திய அணி தேர்வு

இந்திய அணி தேர்வு

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியை இன்று தேர்வாளர்கள் இறுதி செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய குழந்தை பிறப்பு காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து இடையில் விலகிய கேப்டன் விராட் கோலி மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் இணையவுள்ளார்.

இணைய வாய்ப்பு

இணைய வாய்ப்பு

இந்த தொடரில் நடராஜன், ஷர்துல் தாக்கூர் மற்றும் சிராஜ் ஆகியோர் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து இடையில் விலகிய முகமது ஷமி, அஸ்வின், பும்ரா உள்ளிட்டவர்கள் அணியில் சேர்க்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, January 19, 2021, 11:37 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Virat Kohli is set to return as the skipper after going on paternity leave during the ongoing series against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X