For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“மிகவும் இக்கட்டான சூழல் அது..” வெங்கடேஷ் ஐயருக்கு ஏன் பவுலிங் தரவில்லை.. உண்மையை உடைத்த ஷிகர் தவான்

பார்ல்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏன் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என ஷிகர் தவான் விளக்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..!! சிக்கலை தாண்டி சாதனை படைத்த U-19 இந்திய அணி..!! 6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..!! சிக்கலை தாண்டி சாதனை படைத்த U-19 இந்திய அணி..!!

இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங்கின் போது மிடில் ஆர்டரில் சொதப்பியது தான் முக்கிய காரணமாக அமைந்தது.

வெங்கடேஷுக்கு வாய்ப்பு இல்லை

வெங்கடேஷுக்கு வாய்ப்பு இல்லை

68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி அதன் பிறகு பவுமா மற்றும் வான் டர் டுசன் ஜோடியை 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க அனுமதித்தனர். இருவரும் சதம் விளாசி அதிரடி காட்டிய போதும், இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து ஒரே பவுலிங் ஃபார்முலாவை பின்பற்றி வந்தார். குறிப்பாக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை பயன்படுத்தாதது பெரும் கேள்வியாக இருந்தது.

 ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

மிடில் ஓவர்களில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விக்கெட் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். அந்த சமயத்தில் மீண்டும் பும்ரா போன்ற முன்னணி பவுலர்களை பயன்படுத்திய கே.எல்.ராகுல், அறிமுக வீரர் வெங்கடேஷுக்கு வாய்ப்பு தரவில்லை. வெங்கடேஷ் ஐயரின் பவுலிங் எப்படி இருக்கும் என தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு தெரியாததால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்திருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தவானின் விளக்கம்

தவானின் விளக்கம்

இந்நிலையில் அவரை ஏன் பயன்படுத்தவில்லை என சீனியர் வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிடில் ஓவர்களின் போது எங்களுக்கு வெங்கடேஷின் பவுலிங் தேவைப்படவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் பிட்ச்-ல் நல்ல டேர்னிங் இருந்ததால் ஸ்பின்னர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க நேரிட்டது.

Recommended Video

துணை கேப்டன் பதவி கூட Hardik Pandya-க்கு இல்லை.. BCCI முடிவுக்கு என்ன காரணம்?
ரன்கள் அதிகரிக்கும்

ரன்கள் அதிகரிக்கும்

இதுமட்டுமல்லாமல் விக்கெட் கிடைக்காத போது, புது பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ரன்களை மேலும் கசிய விட யாரும் எண்ண மாட்டார்கள். இருக்கும் விக்கெட்டுகளை கைப்பற்ற முன்னணி பவுலர்களை கொண்டுவர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். ஆனால் அவர்களாலும் விக்கெட் எடுக்க முடியாதது துரதிஷ்டவசம். சூழலுக்கு ஏற்ப தான் பவுலர்களுக்கு வாய்ப்பு தர முடியும் என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 20, 2022, 16:38 [IST]
Other articles published on Jan 20, 2022
English summary
Senior player Shikhar Dhawan reveals the reason for why venkatesh iyer not getting chance for bowling in 1st ODI against South africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X