For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கூட சரியில்ல.. பாகிஸ்தானை விளாசிய வஹாப் ரியாஸ்.. சொந்த நாட்டிற்கு எதிராக திரும்பும் வீரர்கள்

பாகிஸ்தான்: சொந்த நாடு என்றும் பாராமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சீனியர் வீரர் வஹாப் ரியாஸ் கடுமையாக விளாசியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தேர்வு முறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து எழுந்து வருகிறது. சமீபத்தில் முகமது அமீர், பாகிஸ்தானில் அனுபவமே இல்லாத இளம் வீரர்கள் சர்வதேச தொடரில் கட்டாயமாக களமிறக்கப்படுகிறார்கள் எனக்கூறியிருந்தார்.

 மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல் மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல்

அதே போல ஜுனைத் கான், கேப்டனுக்கு நெருக்கமான வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதாக கூறினார். இந்நிலையில் இந்த வரிசையில் சீனியர் வீரர் வஹாப் ரியாஸும் இணைந்துள்ளார்.

வஹாப் ரியாஸ்

வஹாப் ரியாஸ்

35 வயதாகும் வஹாப் ரியாஸ் பல்வேறு நாடுகளின் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். குறிப்பாக உலகக்கோப்பையின் போது வாட்சனுக்கு எதிராக அவரின் பந்துவீச்சு இன்னும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் வஹாப் ரியாஸ் சமீப காலமாக பாகிஸ்தான் அணியில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார்.

தேர்வு முறை சரியில்லை

தேர்வு முறை சரியில்லை

இதுகுறித்து பேசியுள்ள வஹாப் ரியாஸ், பாகிஸ்தானில் வீரர்கள் தேர்வு முறை சரியில்லை. ஒரிரு போட்டிகளை வைத்து வீரர்களின் செயல்பாடுகளை முடிவு செய்வது ஒரு விதியாக இருந்து வருகிறது. அவை மாற்றப்பட வேண்டும். அனைவருக்கும் சில நாட்கள் மோசமானதாக அமையலாம். ஒவ்வொரு வீரரையும் அவரின் முந்தை ஆட்டங்கள், சாதனைகளை மனதில் வைத்து தேர்வு செய்ய வேண்டும்.

 ஆதரவு வேண்டும்

ஆதரவு வேண்டும்

ஒரு வீரருக்கு அவரின் நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் அந்த அணி ஆதரவு கொடுத்து உறுதுணையாக இருந்தால் நிச்சயம் அவர் சிறப்பாக ஆடுவார். இந்த மாற்றம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட வேண்டும். காலம் அதற்கு சிறந்த விடை தரும் என நம்புகிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

சரியான விளக்கம் இல்லை

சரியான விளக்கம் இல்லை

அணி நிர்வாகத்திற்கும் வீரர்களுக்குமே சரியான தொடர்பு இல்லாதது பெரிய பிரச்னையாக உள்ளது. அங்கு வீரர்கள், நாம் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு சரியான பதில் அளிக்கப்பட்டால் வீரர்கள் சிறிது நாட்கள் வெளியேறிக்கலாம். எனவே வீரர்களை வெளியேற்றுவதற்கு சரியான காரணத்தை அணி நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.

Story first published: Saturday, May 15, 2021, 19:04 [IST]
Other articles published on May 15, 2021
English summary
Senior Player Wahab Riaz Slams Pakistan’s selection policy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X