For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்த நாடுகள்ள நல்லா இருக்கு.. இந்தியாவுல சரியில்லை.. அஸ்வின், கோலி பிடிவாதம்

ஹைதராபாத் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற பின் அஸ்வின் இந்திய டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் "எஸ்ஜி டெஸ்ட்" பந்து சரியில்லை என புகார் கூறினார்.

அப்போதே பலரும் இதை விவாதித்தனர். இந்த நிலையில் தற்போது கேப்டன் கோலியும் அஸ்வின் கூற்றை ஒப்புக் கொண்டு இந்திய பந்து சரியில்லை என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ட்யூக் மற்றும் கூக்கபுர்ரா வகை பந்துகள் நன்றாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பந்து வகைகள் என்ன?

பந்து வகைகள் என்ன?

ஐசிசி சர்வதேச போட்டிகளில் எந்த வகை பந்து பயன்படுத்த வேண்டும் என இதுவரை கூறியதில்லை. விதிகளுக்கு உட்பட்டு இதுவரை மூன்று வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் இந்தியாவில் கையால் தயாரிக்கப்படும் "எஸ்ஜி டெஸ்ட்" வகை பந்துகள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இயந்திரம் மூலம் உருவாகும் கூக்கபுர்ரா பந்தையும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இங்கிலாந்தில் கையால் தயாரிக்கப்படும் "ட்யூக்" பந்தையும் பயன்படுத்துகின்றன.

குறை கூறிய அஸ்வின்

குறை கூறிய அஸ்வின்

அஸ்வின் இங்கிலாந்து தொடரில் இருந்தே "ட்யூக்" பந்தையும், "கூக்கபுர்ரா" பந்தையும் புகழ்ந்து வந்தார். இந்திய பந்தை விட ட்யூக் சிறப்பாக இருப்பதாக கூறினார். அடுத்து இந்தியாவில் நடந்த முதல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி முடிந்த உடன், இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் பெற்ற இமாலய வெற்றியை பற்றிக் கூட பேசாமல், எஸ்ஜி டெஸ்ட் பந்து சரியில்லை. எங்களால் சரியாக பந்துவீச முடியவில்லை என பெரிதாக குறை கூறினார்.

ஆதரவளிக்கும் கோலி

ஆதரவளிக்கும் கோலி

இப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற பந்து "ட்யூக்" பந்துதான். ஒரு சூழ்நிலை வந்தால், நான் ட்யூக் பந்து தான் உலகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என கூறுவேன். காரணம், அந்த பந்து போட்டியின் எந்த நேரத்திலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது" என கூறினார்.

பந்தை மாத்திருவாங்களோ?

பந்தை மாத்திருவாங்களோ?

அஸ்வின் வம்படியாக இந்திய பந்தை பற்றி குறை கூறுவதையும், தொடர்ந்து கோலி அதற்கு ஆதரவு அளிப்பதையும் பார்த்தால், விரைவில் இந்தியாவில் பயன்படுத்தும் பந்தை மாற்றி விடுவார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. காரணம், தற்போது இந்திய கிரிக்கெட்டில் கோலி சொல்வது தான் நடக்கிறது என ஒரே பேச்சாக இருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது.. நீங்களும் கூட்டிக் கழித்து பாருங்கள்.

Story first published: Thursday, October 11, 2018, 17:10 [IST]
Other articles published on Oct 11, 2018
English summary
SG Test ball is not good, Dukes and Kookaburra balls are good says Kohli after Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X