For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு!

கோவா : ஐபிஎல் மற்றும் இந்திய அளவிலான உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த சுழற் பந்துவீச்சாளர் ஷதாப் ஜகாதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது 39 வயதாகும் ஷதாப் ஜகாதி கோவா மாநில அணிக்காக தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

எனினும், இந்திய அணியில் இதுவரை இடம் பெற்றதில்லை. ஐபிஎல் மூலம் புகழ் பெற்ற அவர், கடந்த ஓராண்டாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

1998 - 99 சீசனில் கோவா அணிக்காக லிஸ்ட் ஏ மற்றும் முதல் தர போட்டிகளில் அறிமுகம் ஆனார் ஷதாப் ஜகாதி. அப்போது முதல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி, ஆல் ரவுண்டராகவும் செயல்பட்டு வந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அறிமுகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அறிமுகம்

ஐபிஎல் தொடர் தொடங்கிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009 சீசனில் அவரை அறிமுகம் செய்தது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார் ஜகாதி.

திருப்புமுனை

திருப்புமுனை

பின்னர், ஜகாதி 2010 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார். அதை பயன்படுத்தி சிஎஸ்கே அணி அந்த தொடரில் கோப்பை வென்றது.

2010 ஐபிஎல் இறுதிப் போட்டி

2010 ஐபிஎல் இறுதிப் போட்டி

2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி 168 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்தது. மும்பை அணியின் அப்போதைய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 3 விக்கெட்கள் இழந்த மும்பை அணியை காப்பாற்ற வேண்டிய நிலையில் பேட்டிங் செய்து வந்தார்.

சச்சின் விக்கெட்

சச்சின் விக்கெட்

அப்போது 15வது ஓவரை வீசினார் ஷதாப் ஜகாதி. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சச்சின் விக்கெட்டையும், ஐந்தாவது பந்தில் சௌரப் திவாரி விக்கெட்டையும் வீழ்த்தி பெரிய திருப்புமுனை அளித்தார்.

சிறந்த தருணம்

சிறந்த தருணம்

சச்சின் விக்கெட் தான் அந்த தொடரில் சிஎஸ்கே கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. அந்த தருணம் தான் தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த தருணம் என ஓய்வை அறிவித்த பின் குறிப்பிட்டுள்ளார் ஷதாப் ஜகாதி.

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

சிஎஸ்கே அணியில் இருந்த இவர், அஸ்வின், ஜடேஜாவின் வரவால் அதிக வாய்ப்பு இன்றி இருந்தார். பின் 2014இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் 2016இல் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார். எனினும், சிஎஸ்கே அணியில் இருக்கும் போது தான் அவர் புகழ் பெற்று விளங்கினார்.

பயிற்சியாளர் பணி

பயிற்சியாளர் பணி

கடந்த ஆண்டு கோவா அணியில் ஷதாப் ஜகாதி சேர்க்கப்படவில்லை. அதன் பின் பயிற்சியாளராக தனிப்பட்ட முறையிலும், கனடா டி20 லீக்கிலும் செயல்பட்டார். இலங்கையின் சில கிரிக்கெட் அகாடமியிலும் பணியாற்றினார்.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

இனி கோவா அணியில் இடம் பெற முடியாது என்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ஷதாப் ஜகாதி. ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கிரிக்கெட் சார்ந்த பணிகளில் தான் ஈடுபடுவேன் என கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, December 29, 2019, 13:29 [IST]
Other articles published on Dec 29, 2019
English summary
Former CSK player Shadab Jakati announced his retirement from cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X