For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஓவர்கள், 3 மெய்டன், 3 விக். 28 ரன்கள்.. நியூசி.யை அலற வைத்த பாகிஸ்தானின் சின்னத்தம்பி

பர்மிங்ஹாம்: நியூசிலாந்து அணி வீரர்களை ஒரு கலக்கு கலக்கிய பாகிஸ்தான் இளம் பவுலரை ஷாகீன் அப்ரிடி தான் மற்ற நாடுகள் உற்று பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முக்கிய போட்டி, நியூசிலாந்துக்கு நெருக்கடியான போட்டி என்பதால் அந்த அணி மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால்.. அனைத்தும் பாக். பந்து வீச்சில் பணால் ஆனது தான் மிச்சம். அதில் இளம் பவுலர் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சை கண்டு உலகின் முக்கிய பவுலர்கள் அசந்து போயிருக்கின்றனர்.

குப்தில் அவுட்

குப்தில் அவுட்

ஆட்டம் தொடங்கியபோது துவக்க வீரர்களாக குப்திலும், முன்ரோவும் களம் இறங்கினர். முகமது அமீர் பந்தில் முதல் விக்கெட்டாக வெளியேறினார் குப்தில். 2வது விக்கெட் முன்ரோ. அவர் அவுட்டாகும் போது அணியின் ஸ்கோர் 24.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

3வது விக்கெட்டுக்கு வந்தார் வில்லியம்சன். ஆனால், மறுமுனையில் இருந்த அதிரடி வீரர் ராஸ் டெய்லர் அவுட். அப்போது ஸ்கோர் 38. அதன் பின்னர் லாதம் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் ஸ்கோர் 4 விக். இழந்து 46 என்று தத்தளித்தது.

இளம் வயது ஷாகீன்

இளம் வயது ஷாகீன்

நியூசிலாந்தை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் தூக்கி குப்புறப்போட்டது 20 வயதான பாக்.கின் இளம் பவுலர். இடது கை வேகப்பந்து வீச்சாளர். மன்ரோ, டெய்லர், லாதம் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை காலி செய்து நியூசிலாந்தை திக்குமுக்காட வைத்தார்.

3 விக். 28 ரன்கள்

3 விக். 28 ரன்கள்

அவர் வீசியது 10 ஓவர்கள். ஆனால் அதன் ரெக்கார்டை பார்த்தால் மலைக்க வைக்கிறது. அந்த ஓவர்களில் அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். நோபால், வொய்டு என எந்த எக்ஸ்டிராஸ் கிடையாது. 3 ஓவர்கள் மெய்டன், கொடுத்த ரன்கள் வெறும் 28, எக்னாமி 2.80.

43 பந்துகளில் ரன் இல்லை

43 பந்துகளில் ரன் இல்லை

நியூசி.க்கு எதிராக இன்று பந்து வீசிய பவுலர்களில் பெஸ்ட் எக்னாமி இது. மொத்தம் அவர் வீசிய 60 பந்துகளில் 43 பந்துகளில் எந்த ரன்னும் வரவில்லை. இரண்டே இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. அவரது பவுலிங்கை கண்டு, கிரிக்கெட் வல்லுநர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, June 26, 2019, 23:20 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
Shaheen Afridi, young paksitan bowler collapsed newzealand batting line up.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X