For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

''நீ பொறக்குறதுக்கு முன்னாடியே நான் பேட் பிடிச்சவன் தம்பி""... இளம் வீரரிடம் மல்லுக்கட்டிய அப்ரிடி!

கொழும்பு: இலங்கையில் பிரீமியர் லீக் தொடரில் ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

போட்டி முடிந்த பின்னர், காலே கிளாடியேட்டர்ஸ் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இளம் பந்து வீச்சாளர் ஆப்கானின் நவீன் உல் ஹக்கிடம் ஒரு சில வார்த்தைகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Shahid Afridi and Afghanistan player fighting on cricket ground

இலங்கையில் லங்கன் பிரீமியர் லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. காலே கிளாடியேட்டர்ஸ்-கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதிய போட்டியின்போது கடும் சண்டை மூண்டது. இந்த ஆட்டத்தின் 18- வது ஓவரில் கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணியில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான நவீன் உல் ஹக்கிற்கும் இடையே மோதல் எற்பட்டது.

சக வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கை குலுக்கிய போது, கிளாடியேட்டர்ஸ் கேப்டன் சாகித் அப்ரிடி, இளம் வீரரான நவீன் உல் ஹக்கிடம் , 'மகனே... நீ பிறப்பதற்கு முன்பே நான் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தவன். இப்படியெல்லாம் இருக்காதே' என கூறினார். இது சர்சையை ஏற்படுத்தியது

Shahid Afridi and Afghanistan player fighting on cricket ground

.பலர் அப்ரிடிக்கு கண்டனம் தெரிவித்தனர். இளம் வீரரிடமா தனது திறமையை காண்பிப்பது என பலரும் கேள்வி எழுப்பினர். பின்னர் அப்ரிடி இது குறித்து டுவிட்டரில் கூறுகையில் 'இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை எளிதானது தான். தவறான பேச்சில் ஈடுபடாமல் விளையாட்டை ஆடுங்கள். ஆப்கானிஸ்தான் அணிக்கும் எங்களுக்கும் நல்லுறவு உள்ளது. எதிரணி வீரர்களை மதிப்பது தான் கிரிக்கெட் போட்டியின் அடிப்படை' என தெரிவித்த்துள்ளார்.

இந்த போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 2, 2020, 10:12 [IST]
Other articles published on Dec 2, 2020
English summary
Pakistan captain Shahid Afridi's statement to Afghanistan's Naveen ul Haq during a match in the Sri Lankan Premier League that he scored a century before you were born has caused controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X