For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் சொல்ல வந்தது என்னன்னா.. "இந்தியாவின் அன்பு" பேச்சு குறித்து அப்ரிதி விளக்கம்!

கொல்கத்தா: இந்தியாவில் எங்களுக்கு நிறைய அன்பு கிடைக்கிறது என்று நான் சொன்னது பொதுவான கருத்துதான். பாகிஸ்தான் ரசிகர்களையோ, எனது நாட்டை அவமதிக்கும் வகையிலோ நான் எதையும் பேசவில்லை என்று பாகிஸ்தான் டி 20 அணி கேப்டன் ஷாஹித் அப்ரிதி விளக்கியுள்ளார்.

உலகக் கோப்பை டி 20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. கொல்கத்தாவுக்கு வந்த பின்னர் கேப்டன் அப்ரிதி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது இந்தியாவில் விளையாடுவது எங்களுக்குப் பிடித்தமான ஒன்று. வேறு எங்கும் விட, பாகிஸ்தானை விட இங்குதான் எங்களுக்கு அதிக அன்பு கிடைக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

பாகிஸ்தானில் கொந்தளிப்பு

பாகிஸ்தானில் கொந்தளிப்பு

அப்ரிதியின் இந்தப் பேச்சு பாகிஸ்தானில் புயலைக் கிளப்பி விட்டுள்ளது. மியான்தத் உள்ளிடட பல முன்னாள் வீரர்கள், அப்ரிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை கேவலப்படுத்தி விட்டார் அப்ரிதி எனறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லாகூரில் வழக்கு

லாகூரில் வழக்கு

இந்த நிலையில் லாகூரில் உள்ள கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர், அப்ரிதி மீது வழக்குப் போட்டுள்ளார். அதில் அப்ரிதிக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

அடடா!

அடடா!

இதையடுத்து தற்போது அப்ரிதி ஒரு விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் டிவிட்டர் பக்கத்தில் அவரது ஆடியோ பேச்சு இடம் பெற்றுள்ளது. அதில் அவர் தான் பேசியது குறித்து விளக்கியுள்ளார்.

பாக். ரசிகர்கள்தான் உசத்தி

பாக். ரசிகர்கள்தான் உசத்தி

அதில் அப்ரிதி கூறுகையில், நான் பாகிஸ்தான் கேப்டன் மட்டுமல்ல. ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதியாகவே இங்கு வந்துள்ளேன். பாகிஸ்தான் ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை.

நேர்மறையாகப் பாருங்கள்

நேர்மறையாகப் பாருங்கள்

எனது பேச்சை நேர்மறையாகப் பாருங்கள். நான் பாகிஸ்தானையும், ரசிகர்களையும் குறைத்துக் கூறவில்லை என்பது அப்போது புரியும்.

எல்லாமே ரசிகர்கள்தான்

எல்லாமே ரசிகர்கள்தான்

எனக்கு எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் ரசிகர்கள்தான் முக்கியம். எனது அடையாளம் பாகிஸ்தான்தான்.

சாதாரணப் பேச்சு

சாதாரணப் பேச்சு

என்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கும்போது எதார்த்தமாக கூறிய வார்த்தை அது. நான் என்ன சொன்னாலும் அது உலகம் முழுவதும் உற்று நோக்கப்படும் என்று எனக்கும் தெரியும்.

பொதுவாகத்தான் சொன்னேன்

பொதுவாகத்தான் சொன்னேன்

எனவே பொதுவாகச் சொல்லப்பட்ட பதில் அது. இந்தியாவில் விளையாடும்போது அனுபவித்து ஆடுகிறோம் என்ற கருத்தில் கூறியது அது.

நான் மட்டும் இல்லை

நான் மட்டும் இல்லை

நான் மட்டும் இல்லை, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமமாம் உல் ஹக் என யாரைக் கேட்டாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்கள். காரணம், இங்கு கிரிக்கெட் வழிபடப்படுகிறது. இம்ரான் கானிடம் கேட்டாலும் இதேதான் பதிலாக வரும். இங்கு கிரி்க்கெட் ஒரு மதமாகும் என்றார் அவர்.

Story first published: Tuesday, March 15, 2016, 15:24 [IST]
Other articles published on Mar 15, 2016
English summary
Under attack in Pakistan for stating that cricketers from his country are loved more in India, captain Shahid Afridi today (March 15) sought to douse the fire by saying that he did not intend to demean his nation and was merely trying to give a "positive message" by showing respect to the fans here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X