For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேவாக், கில்கிறிஸ்ட், டோணியை விட பாகிஸ்தானின் அப்ரிடிதான் அதிரடி வீரராம்! இதோ இருக்கு ஆதாரம்!

By Veera Kumar

நேப்பியர்: பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைநத் பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பதுதான் அந்த சாதனையாகும்.

இதன் மூலம் உலகின் முன்னணி அதிரடி வீரர் தான்தான் என்பதை அப்ரிடி பறைசாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இன்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 339 ரன்களை குவித்தது. அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி 7 பந்துகளில், 2 சிக்சர், 1 பவுண்டரி உதவியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குறைந்த பந்து

குறைந்த பந்து

இந்த ரன்களின் மூலம், அப்ரிடி புது சாதனை படைத்துள்ளார். அதாவது இன்று 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த ரன்களை கடக்க அவர் இதுவரை 6857 பந்துகளை சந்தித்துள்ளார். அதன் அடிப்படையில், அப்ரிடியின் ஸ்டிரைக் ரேட் 116.86 ஆக உள்ளது.

சேவாக்கின் சாதனை முறியடிப்பு

சேவாக்கின் சாதனை முறியடிப்பு

இந்தியாவின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் 7658 பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்து பெற்றிருந்த அதிரடி சாதனையை, அப்ரிடி முறியடித்துள்ளார். சேவாக்கின் ஸ்டிரைக் ரேட் 104.33 ரன்களாகும். அதாவது 100 பந்துகளை சந்தித்தால் சேவாக் 104 ரன்களை எடுப்பார் என்பது சராசரி. நூற்றுக்கு மேலே ஸ்டிரைக் ரேட் வைத்து 8 ஆயிரம் ரன்களை கடந்தது இவ்விரு வீரர்களும் மட்டுமே.

கில்கிறிஸ்ட்

கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் கில்கிறிஸ்ட் 8310 பந்துகளை சந்தித்துதான், 8 ஆயிரம் ரன்களை கடந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 96.94 ஆகும். ஜெயசூர்யா 8920 பந்துகளிலும், இந்திய கேப்டன் டோணி, 8950 பந்துகளிலும் 8 ஆயிரம் ரன் என்ற சாதனையை எட்டினர்.

கெய்ல், கிப்ஸ்

கெய்ல், கிப்ஸ்

இந்த பட்டியலில் 84.82 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் கெய்ல் 9வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸ் 83.26 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

பினிஷிங் சரியில்லையே..

பினிஷிங் சரியில்லையே..

ஆனால் பிற பேட்ஸ்மேன்களை ஒப்பிட்டால் அப்ரிடியின் ரன் சராசரி குறைவேயாகும். வந்தோமா.. அதிரடியாக இரண்டு ஷாட்டுகளை அடித்தோமா.. அவுட் ஆகி போனோமா என்பதுதான் அப்ரிடி வாடிக்கை. எனவேதான் அவரது ரன் குவிப்பு சராசரி குறைவாக உள்ளது. அந்த வகையில் ஷேவாக் ஒரு படி மேல்தான். ஏனெனில், அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராகும்.

Story first published: Wednesday, March 4, 2015, 12:58 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
Shahid Afridi smashed a typically breezy 7-ball 21 in a Pool B Cricket World Cup 2015 match against United Arab Emirates at Napier on Wednesday to enter the record books for scoring 8000 runs in One Day Internationals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X