For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விளையாட வருமாறு தொடர்ந்து இந்தியாவிடம் கெஞ்சுவதா? பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு அஃப்ரிடி கண்டனம்

லாகூர் : கிரிக்கெட் தொடரில் பங்கேற்குமாறு தொடர்ந்து இந்தியாவிடம் கெஞ்சுவதா என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட் 20 ஓவர் அணியின் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டில் விளையாட வருமாறு தொடர்ந்து இந்தியாவிடம் முறையிட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கபட்டு வருகிறது.

afridi

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிடம் கெஞ்சி வருது பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் சாகித் அப்ரிடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது...

இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும்...மீண்டும் ஏன் போராடுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு நம்முடன் கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், நமக்கும் அவர்களுடன் விளையாடுவதற்கு அவசியமான தேவை ஒன்றும் கிடையாது.

நாம் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தோம். அவர்களுக்கு நம்முடன் விளையாட விருப்பம் இல்லை என்றால், அதனால் எந்த கவலையும் இல்லை. இந்தியாவுடன் விளையாடாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஷஸ் போட்டியை விட மிகப்பெரிய என்பதில் சந்தேகமில்லை.

இனி இந்தியாவை விடுத்து பிற வெளிநாட்டு அணிகளை இங்கு வந்து விளையாட வைக்க நாம் முயற்சி மேற்கொள்வதே நல்லது. இவ்வாறு ஷாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார்.

Story first published: Friday, September 18, 2015, 21:04 [IST]
Other articles published on Sep 18, 2015
English summary
Pakistan Twenty20 captain Shahid Afridi said Friday he wants his country's cricket board to stop advocating for a test series against India and concentrate more on persuading other teams to tour Pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X