ஒவ்வொன்னும் அடி இல்ல இடி.. 19 பாலில் கேமை மாற்றிய தமிழக வீரர்.. கிரிக்கெட்டின் புதிய கிங் கான்!

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று தமிழக வீரர் ஷாருக்கான் ஆடிய விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஐபிஎல்லில் கொண்டு வரும் வகையில் இந்த தொடர் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

எப்படி

எப்படி

சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடந்து வருகிறது . ஏற்கனவே பல்வேறு தரப்பு போட்டிகள் குழுக்களுக்கு உள்ளே நடந்துவிட்டது.

நிலைமை எப்படி

நிலைமை எப்படி

தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு அணி இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. நேற்று முதலில் ஆடிய இமாச்சல பிரதேச அணி 135 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

விக்கெட்

விக்கெட்

பாபா அபராஜித் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆட இன்னொரு பக்கம் அனைத்து வீரர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். 13 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து தமிழ்நாடு அணி வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 7 ஓவரில் 70 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தமிழக அணியின் இளம் வீரர் ஷாருக்கான் களமிறங்கினார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஷாருக்கான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார். வெறும் 19 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். 5 பவுண்டரி, 2 சிக்ஸர் என்று ஷாருக்கான் மாஸ் ஆட்டம் ஆடி உள்ளார். தமிழ்நாடு அணி தோல்வி அடைந்துவிடும் என்று நினைத்த நிலையில் 2 ஓவர்களை மீதம் வைத்து தமிழக அணியை ஷாருக்கான் வெற்றிபெற வைத்தார்.

கடைசி பவர்பிளே

கடைசி பவர்பிளே

அதிலும் கடைசி பவர்பிளேவில் இவர் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. தற்போது தமிழக அணியில் இருக்கும் ஷாருக்கான் கண்டிப்பாக ஐபிஎல் ஏலத்தில் கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி கட்டத்தில் ஆடுவதற்கு சரியாக வீரர் இல்லாமல் இருக்கும் சிஎஸ்கே, கொல்கத்தா ஆகிய அணிகள் இவரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதிலும் சிஎஸ்கே அணி இவரை குறி வைக்க அதிக வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணிக்காக இவர் மிடில் ஆர்டரில் களமிறங்கலாம். அதிக தொகையை இவருக்கு செலுத்த வேண்டியது இல்லை என்பதால் சிஎஸ்கே தாராளமாக இவரை ஏலத்தில் குறி வைக்கலாம் என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Tamilnadu player Shahrukh Khan smashes unbeaten 40 in 19 bowls in Syed Mushtag Ali Cup.
Story first published: Wednesday, January 27, 2021, 9:59 [IST]
Other articles published on Jan 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X