களத்தில் தூக்கி எறியப்பட்ட ஸ்டம்புகள்.. அம்பயருக்கு எதிராக சகிப் செய்த சம்பவம்.. தடை விதித்த வாரியம்

டாக்கா: டி20 போட்டியின் போது வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் செய்த செயலுக்காக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாக்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது சகிப் செய்த அவதூறான செயல் இன்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை மற்றும் அபராதம் விதித்துள்ளது.

 வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

வங்கதேசத்தின் உள்நாட்டு தொடரான கிரிக்கெட் தொடர் ‘தாக்கா ப்ரீமியர் ட்விஷன்' தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஷகிப்-அல் ஹசன் தலைமையிலான மோஹம்மெதான் அணி 145 ரன்கள் எடுத்தது.

பிரச்னை என்ன

பிரச்னை என்ன

பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, முஷ்பிகுர் ரஹீமுக்கு சகிப் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சகிப் அல் ஹசன், ஸ்டெம்புகளை ஓங்கி உதைத்து தள்ளினார். மேலும் நடுவருடன் கடும் வாக்கு வாதம் செய்தார். அதன் பிறகு, 2வது இன்னிங்ஸின் 6 ஓவரில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டியை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், 3 ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.

மன்னிப்பு

மன்னிப்பு

இந்த பிரச்னை பூதாகரமாக, உஷாரான ஷகிப் பேஸ்புக்கில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அதில், வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எனது செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்தீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். சில சமயங்களில் இது போன்று துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுகிறது. இதற்காக அணி நிர்வாகம், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இந்நிலையில் அவரின் மோசமான செயல்பாட்டிற்காக தாக்கா ப்ரீமியர் தொடரில் அடுத்த 3 போட்டிகளில் விளையாட சகிப் அல் ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவருக்கு வங்கதேச பண மதிப்பில் 5 லட்சம் அபராதமும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. வங்கதேச அணியின் சீனியர் வீரராக இருக்கும் ஒரு வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shakib Al Hasan banned for 3 Dhaka Premier League matches and fined
Story first published: Sunday, June 13, 2021, 10:36 [IST]
Other articles published on Jun 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X