For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளைப் பார்க்க முடியலையே.. கஷ்டமா இருக்குப்பா.. ஹோட்டலில் தவிக்கும் ஷாகிப் அல் ஹசன்

வாஷிங்டன்: வங்கதேச முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் அமெரிக்காவில் போய் மாட்டிக் கொண்டுள்ளார். கொரோனா பீதி காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது மகளைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு உருக்கமான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வந்தார் ஷாகிப் அல் ஹசன். வந்ததும் அவரை தனிமைப்படுத்தி விட்டனர். அமெரிக்காவில் இந்த கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தக் கட்டுப்பாடு.

அவர் தற்போது ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். தனது மனைவி உம்மி அகமது சிஷிர், மகள் ஆலைனா ஹசன் ஆகியோரைப் பார்ப்பதற்காகவே அவர் வந்திருந்தார். தற்போது பார்ப்பதை தவிர்த்து தனித்துத் தங்கியுள்ளார்.

அமெரிக்காவில் பரவும் கொரோனாவைரஸ்

அமெரிக்காவில் பரவும் கொரோனாவைரஸ்

அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது கொரோனாவைரஸ். மார்ச் 22ம் தேதி நிலவரப்படி அங்கு 3 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு பரவியுள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு இதுவரை 16,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்காவுக்கு வந்து குடும்பத்தினரை சந்திக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஷாகிப் அல் ஹசன்.

14 நாள் தனித்திருத்தலில் ஹசன்

14 நாள் தனித்திருத்தலில் ஹசன்

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் முதல் ஆக்டிவ் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கிறார் ஷாகிப் அல் ஹசன். இதுதொடர்பாக தனது பேஸ்புக்கில் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில், நான் தற்போது 14 நாள் தனித்திருத்தலுக்கு வந்துள்ளேன். என்னையும், எனது குடும்பத்தாரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தனித்திருத்தல். இது அவசியம், நல்லதும் கூட. சில நாட்களுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்தேன். பயணத்தின்போதே சற்று பயமாகத்தான் இருந்தது.

வைரஸ் யாருக்கும் பரவக் கூடாது

வைரஸ் யாருக்கும் பரவக் கூடாது

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டேன். நல்ல சத்தான சாப்பாடும் எடுத்துக் கொண்டேன். அமெரிக்காவுக்கு வந்த பிறகு நேராக ஹோட்டலுக்குப் போய் விட்டேன். அங்கு 14 நாட்கள் தங்கியிருக்கப் போவதாக எனது மனைவி, மகளுக்குச் சொல்லி விட்டேன். நான் வங்கதேசத்திலிருந்து கிளம்பியதுமே, என் மூலமாக யாருக்கும் வைரஸ் போய் விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் ஹோட்டலுக்கு வந்து விட்டேன்.

எனது மகளைக் கூட பார்க்கவில்லை

எனது மகளைக் கூட பார்க்கவில்லை

இன்னும் எனது மகளைக் கூட பார்க்கவில்லை. அதுதான் வலியாக இருக்கிறது. அவளைப் பார்க்காமல் இருப்பது கஷ்டமானது. ஆனால் இந்த தியாகம் இப்போது அவசியம். காரணம் இது எனது, எனது குடும்பத்தினர் நலன் சம்பந்தப்பட்டது என்பதால் இது நல்லதுதான். வெளிநாடுகளில் தங்கியிருப்போர் தயவு செய்து வெளியே வராதீர்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள். அக்கம் பக்கத்திற்குக் கூட போகாதீர்கள். அடுத்த 14 நாட்கள் மிக மிக அவசியமானது, முக்கியமானது என்று கூறியுள்ளார் ஷாகிப் அல் ஹசன்.

Story first published: Tuesday, March 24, 2020, 12:50 [IST]
Other articles published on Mar 24, 2020
English summary
Bangladesh All rounder Shakib Al Hasan is in self-isolation for 14 days after he reached US
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X