For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருந்தாத ஷகிப்.. கடும் மோதல்.. ஸ்டெம்ப்பை கொத்தோடு பிடுங்கி எறிந்த அவலம் - அதிர்ச்சி வீடியோ

டாக்கா: வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் இந்த செயல்பாடு இதைவிட மோசமாக இனி இருக்கவே முடியாது. ஒரு கிரிக்கெட் வீரர், எப்படி நடந்து கொள்ள கூடாது என்ற மிகப்பெரிய எடுத்துக்காட்டாக தன்னை நிலைநாட்டி இருக்கிறார். அடுத்த நூற்றாண்டு வரை இவர் தான் இதற்கு ரோல் மாடலாகவும் இருக்கப் போகிறார்.

வங்கதேச கிரிக்கெட் வீரர்களை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. மெச்சூரிட்டி கிடையாது, நேர்த்தி கிடையாது, புரஃபஷனல் கிரிக்கெட்டர்ஸ் என்ற நியாபகம் ஒருநாளும் இருந்ததில்லை.

 எந்நாளும் தனிமை.. மூச்சு முட்டிய இந்திய அணிக்கு.. எந்நாளும் தனிமை.. மூச்சு முட்டிய இந்திய அணிக்கு..

ஆனால், இவர்கள் சர்வதேச அணியாக இருக்கிறார்கள். போட்டிகளின் போது இவர்கள் எதிரணி மீது காட்டும் வன்மம் என்பது பக்கத்து வீட்டுக்காரனுடன் பல ஜென்மங்களாக இருக்கும் வாய்க்கா தகராறு போன்று இருக்கிறது. அவ்வளவு கோபமும், ஆக்ரோஷமும், ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத வன்மத்தையும் கக்குகிறார்கள்.

ஷகிப்-அல் ஹசன்

ஷகிப்-அல் ஹசன்

இதற்கு மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது Dhaka Premier Division Twenty20 கிரிக்கெட் லீக். இத்தொடர் இப்போது வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், மோஹம்மெதான் அணியின் கேப்டன் ஷகிப்-அல் ஹசன்.

தெறித்து விழுந்த பைல்ஸ்

தெறித்து விழுந்த பைல்ஸ்

முதலில் பேட்டிங் செய்த ஷகிப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

நின்று போன ஆட்டம்

நின்று போன ஆட்டம்

அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.

ரசிகர்கள் எரிச்சல்

ரசிகர்கள் எரிச்சல்

எப்படி.. கேட்கவே நாம் தெருவில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் போல் இருக்கிறதா? இப்படியொரு மோசமான செயல்பாட்டை உலகத் தரம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் வெளிப்படுத்தி இருப்பது வங்கதேச ரசிகர்களையே எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் தான், இலங்கைக்கு எதிரான தொடரில், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், இலங்கை வீரரை தள்ளிவிடச் சொல்லி, சக வங்கதேச பவுலரிடம் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், ஷகிப்பின் இந்த செயல்பாடு எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாததாக அமைந்துள்ளது.

Story first published: Friday, June 11, 2021, 18:38 [IST]
Other articles published on Jun 11, 2021
English summary
Shakib Al Hasan Kicks Throws Stumps video - ஷகிப் அல் ஹசன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X