For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது லிஸ்ட்லயே இல்லையே.. MI-ன் "மாஸ்டர் பிளான்" - ஹர்திக் பாண்ட்யா விளையாடாததற்கு இதுதான் காரணமா!

அபுதாபி: மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஏன் இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து அணியின் பவுலிங் கோச் ஷேன் பாண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று (செப்.23) நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள் சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்

 சரிந்த விக்கெட்ஸ்

சரிந்த விக்கெட்ஸ்

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சுனில் நரைன் ஓவரில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் 14 ரன்களில் ஃபெர்கியூசன் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். பிறகு பொல்லார்ட் 21 ரன்களும், க்ருனால் பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணி சார்பில், ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 அபார வெற்றி

அபார வெற்றி

இதையடுத்து, கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கில் 13 ரன்களில் அவுட்டானாலும், வெங்கடேஷ் ஐயர் மும்பை பவுலர்களை விட்டு விளாசினார். 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியில் அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். மறுபக்கம், ஒன் டவுன் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி, அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில், கொல்கத்தா அணி 15.1வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் அடித்து மெகா வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அதிக ரன் ரேட்டுடன் (+0,36) 4வது இடத்துக்கு முன்னேறியது. 9வது போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. அதேசமயம், 9வது போட்டியில் விளையாடிய மும்பை 5 தோல்வியை பதிவு செய்தது. அதுமட்டுமல்ல, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின்தங்கியது.

Recommended Video

MI Vs KKR Match Highlights |MI அணியை சுக்குநூறாக்கிய KKR | IPL 2021
 ஹர்திக் எங்கே?

ஹர்திக் எங்கே?

மும்பை இந்தியன்ஸ் அணியின் சொதப்பலான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, மிடில் ஆர்டர் ஏகத்துக்கும் சொதப்பி வருகிறது. நேற்றைய போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஹர்திக் பாண்ட்யா காயத்தில் சிக்கித் தவிக்கிறாரா? அல்லது ஃபார்மில் இல்லாததால் அணியில் சேர்க்கப்படவில்லையா? எனது குறித்து பெரும் குழப்பம் நிலவியது. சென்னைக்கு எதிரான போட்டி தினத்தின் கூட அவரை மைதானத்தில் பயிற்சியில் காண முடிந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் அவரை ஸ்டேடியத்தில் கூட காண முடியவில்லை.

 டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியில் சேர்க்கப்படாதது குறித்து மும்பை அணியின் பவுலிங் கோச் ஷேன் பாண்ட் கூறுகையில், "ஹர்திக் ரோஹித்தைப் போல நன்றாக பயிற்சி செய்கிறார். அவர் அணியில் விளையாடும் தருணத்தை நெருங்கி வருகிறார். நாங்கள் மும்பை அணியின் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்வதோடு இல்லாமல், இந்திய அணியின் தேவைகளையும் மனதில் வைத்து பணியாற்றுகிறோம். இந்திய அணி அடுத்து டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ளவிருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், அடுத்து வரும் டி20 உலகக் கோப்பையிலும் இந்திய வீரர்கள் பங்கேற்பதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. ஹர்திக் அடுத்த போட்டிக்கு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம். நான் சொன்னது போல், அவர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். எல்லா வகையிலும் நன்றாக பயிற்சி பெற்றுள்ளார்.

 பொறுமை முக்கியம்

பொறுமை முக்கியம்

ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் களத்தில் இறக்கிவிட நாங்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறோம். அதேசமயம், அவர் என்ன விரும்புகிறார் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மீதமுள்ள போட்டிகளில் நாம் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும்போது காயமடைந்த அவரை மீண்டும் அவசரப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் சரியானதைச் செய்கிறோம் என்று நம்புகிறேன். நாங்கள் அவரை விரைவில் அணியில் விளையாடுவதை உறுதி செய்வோம். இத்தொடரில் இறுதிக் கட்டத்தில் ஹர்திக் களமிறங்கி அணியில் தாக்கத்தை ஏற்படுத்தி, எங்களை பிளே ஆஃப்களில் அழைத்துச் சென்று, அங்கிருந்து போட்டியை வெல்வார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, September 24, 2021, 19:31 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
Shane Bond about Hardik is missing in plaing XI - பாண்ட்யா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X