For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'கிரிக்கெட் ஸ்பிரிட்..' அஸ்வின்-மோர்கன் மோதலில் யார் மீது தவறு.. வார்த்தை மோதலில் ஷேன் வார்ன்&சேவாக்

டெல்லி: நேற்றைய போட்டியில் அஸ்வினுக்கும் மோர்கனுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் கிரிக்கெட் ஸ்பிரிட்டை மீறி நடந்து கொண்ட அஸ்வின் மீதே தவறு உள்ளதாக ஷேன் வார்ன் விமர்சித்துள்ளார். அதேநேரம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த ஸ்பிரிட் எங்குப் போனது எனச் சேவாக் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. அங்கு சில வாரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இருப்பினும், கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டது

இதனிடையே சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய அமீரகத்தில் இப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் ஒவ்வொரு போட்டிகளிலும் அனல் பறக்கிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடஸ்ரை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் திணறிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. 19 ஓவர் வரை இந்த போட்டி சென்றது. இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியைக் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

திடீர் வாக்குவாதம்

திடீர் வாக்குவாதம்

அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்த போது 19ஆவது ஓவரை வெங்கடேஷ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ரிஷப் பந்த் ரன் எடுக்க முயன்றனர். அப்போது திரிபாதி எரிந்த பந்து, ரிஷப் பந்த் மீது படவே மறுமுனையில் இருந்து அஸ்வின் 2ஆவது ரன்னுக்கு ஓடினார். அடுத்து 20 ஓவரின் முதல் பந்திலேயே டிம் சவுதி பந்தில் அஸ்வின் அவுட் ஆனார். அப்போது அஸ்வினுக்கும் சவுதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக் கண்ட கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனும் எதோ கூற, வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

மோர்கன் செய்தது சரி

மோர்கன் செய்தது சரி

அஸ்வினின் இந்த செயல் குறித்து கிரிக்கெட் அரங்கில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே ஃபீல்டர் எறியும் பந்து பேட்ஸ்மேன்களின் உடலில் பட்டால், கிரிக்கெட் ஸ்பிரிட் காரணமாக ஓடமாட்டார்கள். இதனால் அஸ்வினின் இந்த செயலை பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விஷயத்தில் அஸ்வின் மற்றும் மற்றவர்கள் என்று விவாதம் மாறக் கூடாது. இது மிகவும் எளிமையான ஒன்று. இது மிகவும் அவமானகரமானது. இது போன்ற செயல் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது. அஸ்வின் ஏன் மீண்டும் நாம் கை காட்டும் அந்த நபராக இருக்க வேண்டும்? ஆக்ரோஷமாக மோர்கனுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கருத்து

தினேஷ் கார்த்திக் கருத்து

முன்னதாக இது குறித்து கேகேஆர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், "19 ஓவரில் ராகுல் திரிபாதி பந்தை வீசினார். அது ரிஷப் பந்த் மீது பட்டது. அதன் பிறகு அஸ்வின் ரன் ஓடினார். இது மோர்கனுக்கு பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இது போன்ற சூழல்களில் கிரிக்கெட் ஸ்பிரிட் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பவர் மோர்கன். இதில் யார் தவறு யார் சரி என்று தெளிவாகக் கூற முடியாது" என்று கூறியிருந்தார். இது இணையத்தில் பெரிய விவாதமானது.

வீரேந்திர சேவாக்

கடந்த 2019 உலகக் கோப்பை சமயத்தில் இந்த கிரிக்கெட் ஸ்பிரிட் இங்கிலாந்து அணிக்கு எங்குப் போனது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து வீரேந்திர சேவாக் தனது ட்விட்டரில், "கடந்த 2019 ஜூலை 14ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் அடித்து பந்து பவுன்டரிக்கு சென்ற போது, லார்ட்ஸுக்கு வெளியே மோர்கன் என்ன தர்ணா செய்தாரா? இல்லை உலகக் கோப்பையை வாங்க மறுத்துவிட்டு நியூசிலாந்திற்கு விட்டுக் கொடுத்தார்களா? இது தான் பட்டால், கிரிக்கெட் ஸ்பிரிட்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Wednesday, September 29, 2021, 19:58 [IST]
Other articles published on Sep 29, 2021
English summary
Shane Warne latest tweet about Ravi Ashwin and Eoin Morgan fight. Sehwag latest tweet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X