For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க உள்ளே போக முடியாது.. இந்திய வெற்றிக்கு பின் வேகமாக ஓடி வந்த ஷேன் வார்னே..பரபரப்பு நிமிடங்கள்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெரும் பரபரப்பிற்கு இடையியே இந்தியா ஆஸ்திரேலியா மோதிய மிக நீண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவிற்கு வந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

உண்மையில் நடந்தது இதுதான்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை.. என்ன காரணம்? உண்மையில் நடந்தது இதுதான்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை.. என்ன காரணம்?

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தி உள்ளது.

எப்படி

எப்படி

இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்த போதே ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே இந்திய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்திய வீரர்கள் அதிர்ஷ்டத்தால் விக்கெட் எடுக்கிறார்கள். அவர்களிடம் போதிய திட்டமிடல் மற்றும் திறமை இல்லை என்று வார்னே விமர்சனம் செய்தார்.

விமர்சனம்

விமர்சனம்

அதோடு நடராஜன் பிக்சிங் செய்தது போல ஆடுகிறார். புஜாராவின் ஹெல்மெட்டை நோக்கி பந்தை வீசி அவரை காலி செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்திய வீரர்களின் உடலை குறி வைத்து தாக்க வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை வார்னே வைத்து வந்தார்.

வெற்றி

வெற்றி

இந்தியா வெற்றிபெற போகிறது என்பதை உணர்ந்து கொண்ட வார்னே, மனஉளைச்சலில் வாய்க்கு வந்ததை பேச தொடங்கினார். வார்னேவின் இந்த பேச்சுக்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் நேற்று ஆட்டத்திற்கு பின் தி கப்பா மைதானத்தின் கமென்டரி பேனலில் இருந்து மைதானம் உள்ளே நுழைய வார்னே முயன்று இருக்கிறார்.

 உள்ளே வர வேண்டும்

உள்ளே வர வேண்டும்

ஆட்டம் முடிந்த பின் மைதானம் உள்ளே செல்ல இவர் முயன்றுள்ளார். ஆனால் பாதுகாவலர்கள் இவரை மைதானம் உள்ளே அனுமதிக்கவில்லை. மைதானத்திற்கு உள்ளே சென்று வார்னே கருத்து தெரிவிக்க முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

குரல்

குரல்

இவர் நேற்று மைதானத்திற்கு உள்ளே வந்து இந்திய அணியின் வெற்றியை விமர்சிக்கும் வகையில் கருத்து கூறி இருக்கலாம். அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி தேவையில்லாத பிரச்சனை செய்து இருக்கலாம். இதனால்தான் நேற்று வார்னேவை மைதானத்திற்கு உள்ள அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 20, 2021, 9:55 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
Shane Warne didn't allow inside the Gabba ground after the final match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X