For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் தான் பெஸ்ட்.. இல்லை குல்தீப் தான் பெஸ்ட்.. மாத்தி மாத்தி சொல்லும் வார்னே - முரளிதரன்!

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் யார் நம்பர் 1 ஸ்பின்னர்? அஸ்வினா? குல்தீப் யாதவ்வா? என்ற விவாதம் சில நாட்களாக கிளம்பியுள்ளது. இதற்கு காரணம் ரவி சாஸ்திரி.

ரவி சாஸ்திரியின் பேட்டியால் தொடங்கிய இந்த விவாதம் குறித்து உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கருத்து கூறி இருந்தார். தற்போது இது குறித்து மற்றொரு சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவும் தன் கருத்தை கூறி இருக்கிறார்.

ISL 2019 : ஜெயிக்கப் போவது யார்.. சேட்டன்களா.. சென்னை மச்சான்ஸ்-ஆ? கேரளா - சென்னை போட்டி! ISL 2019 : ஜெயிக்கப் போவது யார்.. சேட்டன்களா.. சென்னை மச்சான்ஸ்-ஆ? கேரளா - சென்னை போட்டி!

ரவி சாஸ்திரி சொன்னது என்ன?

ரவி சாஸ்திரி சொன்னது என்ன?

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின் காயம் காரணமாக ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். அவருக்கு பதிலாக கடைசி போட்டியில் பங்கேற்ற குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

நம்பர் 1 ஸ்பின்னர்

நம்பர் 1 ஸ்பின்னர்

சமீபத்தில் ஒரு பேட்டியில், ரவி சாஸ்திரி ஒரு வெளிநாட்டு போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியதற்காக குல்தீப் யாதவ்வை புகழ்ந்து தள்ளி இருந்தார். அவர் தான் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர் என கூறினார்.

வெளிநாட்டு டெஸ்ட்

வெளிநாட்டு டெஸ்ட்

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு ஸ்பின்னர் தான் ஆடவைக்க முடியும் என்ற சூழ்நிலை வந்தால் குல்தீப் யாதவ் தான் அணியில் இடம் பெறுவார் என கூறி இருந்தார் ரவி சாஸ்திரி.

ஷேன் வார்னே ஆதரவு யாருக்கு?

ஷேன் வார்னே ஆதரவு யாருக்கு?

தற்போது ஷேன் வார்னே அஸ்வின் - குல்தீப் யாதவ் இருவரில் குல்தீப் யாதவ் தான் தன் தேர்வு என கூறினார். அதற்கு காரணம், லெக்-ஸ்பின்னர்கள் தான் போட்டியை வென்று கொடுப்பவர்கள். எந்த சூழ்நிலையிலும் குல்தீப் இடம் பெறுவார் என்றார்.

முத்தையா முரளிதரன் சொன்னது என்ன?

முத்தையா முரளிதரன் சொன்னது என்ன?

வார்னே இப்படி கூறி இருக்கையில், முத்தையா முரளிதரன் அஸ்வின் தான் உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர், அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். எனவே அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்தை கூறி இருந்தார்.

ஆஃப் ஸ்பின் x லெக் ஸ்பின் போட்டி

ஆஃப் ஸ்பின் x லெக் ஸ்பின் போட்டி

வார்னே - முரளிதரன் என இரண்டு சுழல் ஜாம்பவான்கள் வெவ்வேறு கோணங்களில், குல்தீப் - அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் முரளிதரன் - அஸ்வின் இருவரும் ஆஃப் - ஸ்பின்னர்கள். வார்னே - குல்தீப் இருவரும் லெக் ஸ்பின்னர்கள். மேலும், குல்தீப் யாதவ்வின் ஆதர்ச சுழல் பந்துவீச்சு குரு வார்னே தான்.

அஸ்வின் - குல்தீப் விக்கெட்கள்

அஸ்வின் - குல்தீப் விக்கெட்கள்

2018இல் அஸ்வின் 10 டெஸ்ட் போட்டிகளில் 38 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். குல்தீப் 6 போட்டிகளில் 24 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அஸ்வினை விட குல்தீப் அதிக விக்கெட்கள் வீழ்த்துகிறார் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், குல்தீப் இதுவரை ஆறு போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

குல்தீப் ஏன் சிறந்தவர்?

குல்தீப் ஏன் சிறந்தவர்?

பந்துவீச்சை விட குல்தீப் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய துணை கண்டத்துக்கு வெளியே உள்ள நாடுகளின் பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். இதுவே, குல்தீப் யாதவ் சிறந்தவர் என்ற பேச்சுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

காயம் தான் காரணமா?

காயம் தான் காரணமா?

அஸ்வின் ஒருவேளை காயம் அடையாமல் இருந்திருந்தால், இந்த விவாதமே எழுந்திருக்காது என்பதே உண்மை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் பாதியில் காயம் காரணமாக அஸ்வின் விலகியது விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் உடற்தகுதி மீது கேள்விகளை உண்டாக்கியது. தற்போது அணியில் அவருடைய இடத்துக்கும் வினையாக வந்துள்ளது.

Story first published: Friday, February 15, 2019, 11:59 [IST]
Other articles published on Feb 15, 2019
English summary
Shane Warne differs over Muthaiah Muralitharan comments on Ashwin vs Kuldeep Yadav
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X