For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ. 4.8 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்னின் தொப்பி -காட்டுத்தீ நிவாரணத்திற்கு அளிப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நன்கொடை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஷேன் வார்ன் தன்னுடைய பேகி கிரீன் தொப்பியை ஏலம் விட்டார். அந்த தொப்பி இதுவரை இல்லாத வகையில் இந்திய மதிப்பில் 4.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் தனது தொப்பியை ஏலத்தில் எடுத்தவருக்கு ஷேன் வார்ன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதில் 26 பேர்வரை உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். 100 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளன.

சோலே பட்டூரேவானாலும் பந்து வீச்சானாலும் கவனமாக கையாள வேண்டும்- கோலிசோலே பட்டூரேவானாலும் பந்து வீச்சானாலும் கவனமாக கையாள வேண்டும்- கோலி

26 பேர் உயிரிழப்பு

26 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீயால் பல்வேறு இடங்கள் புகைமண்டலமாக காணப்படுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பார்முலா ஒன் சாம்பியன் உதவி

பார்முலா ஒன் சாம்பியன் உதவி

ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து நிவாரண உதவி அளித்து வருகின்றனர். 5 லட்சம் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ள பார்முலா ஒன் சாம்பியன் லெவிஸ் ஹாமில்டன் இந்த காட்டுத்தீயில் சிக்கி 100 கோடி காட்டு விலங்குகள் உயிரிழந்ததுற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீரர்களும் நன்கொடை

டென்னிஸ் வீரர்களும் நன்கொடை

கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் லின், க்ளென் மாக்ஸ்வெல், டி'ஆர்சி ஷார்ட் ஆகியோர் நன்கொடை அறிவித்துள்ள நிலையில், டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் செரினா வில்லியம்ஸ், ரோஜர் பெடரர், ஆஷ்லீ பார்டி போன்றவர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.

ரூ. 4.8 கோடிக்கு ஏலம்

ரூ. 4.8 கோடிக்கு ஏலம்

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்ன், தன்னுடைய பேகி பச்சை தொப்பியை ஆன்லைனில் ஏலம் விட்டார். இந்த தொப்பி 4.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஏலம் விட்ட ஷேன் வார்ன்

ஏலம் விட்ட ஷேன் வார்ன்

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளை முதல் முறையாக விளையாடும் வீரர்களுக்கு இந்த பச்சை நிற தொப்பி வழங்கப்படுகிறது. இதை அவர்கள் தங்களது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கிறார்கள்.

ஏலம் எடுத்தவருக்கு பாராட்டு

இந்நிலையில் தன்னுடைய தொப்பியை ஏலம் எடுத்தவருக்கும் மற்றும் ஏலத்தில் பங்கேற்றவர்களுக்கும் ஷேன் வார்ன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்ததைவிட அதிக தொகைக்கு தன்னுடைய தொப்பி ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Story first published: Friday, January 10, 2020, 13:53 [IST]
Other articles published on Jan 10, 2020
English summary
Shane Warne's Baggy Green cap auctioned and raises Rs. 4.8 crores for Bushfire victims
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X