பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்!

Shane Watson தலைவராக்கி அழகு பார்க்கும் ஆஸ்திரேலியா

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான ஷேன் வாட்சன் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சிட்னியில் திங்கள் அன்று இரவு நடைபெற்ற அந்த சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தான் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பெருமிதம் தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், தான் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் வருவதற்கு இந்த பொறுப்பு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

190 சர்வதேச ஒருநாள் போட்டிகள்

190 சர்வதேச ஒருநாள் போட்டிகள்

ஆஸ்திரேலியாவிற்காக 190 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 59 டெஸ்ட் மேட்ச்கள், 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காகவும் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆண்டு கூட்டத்தில் முடிவு

ஆண்டு கூட்டத்தில் முடிவு

38 வயதான ஷேன் வாட்சன், தற்போது ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 மிகப்பெரிய கடமை காத்துள்ளது

மிகப்பெரிய கடமை காத்துள்ளது

தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு பெருமையையும் கவுரவத்தையும் அளிப்பதாக ஷேன் வாட்சன் தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய கடமை தனக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷேன் வாட்சன் டிவிட்டரில் கருத்து

ஷேன் வாட்சன் டிவிட்டரில் கருத்து

தலைவர் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளது தான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வருவதற்கு தனக்கு உதவி புரியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Australian cricketer Shane watson appointed as Australia's cricketers association head
Story first published: Tuesday, November 12, 2019, 18:15 [IST]
Other articles published on Nov 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X