ஒரு மட்டு மரியாதை வேணாமா? ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்!

Bushfire Cricket Bash 2019-20 | Watson asks apology to Wasim Akram

சிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், காட்டுத்தீ நிவாரணப் போட்டியில் வாசிம் அக்ரம் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஒருவரின் ஓவரில் எந்த மரியாதையும் இல்லாமல், சரமாரியாக வாட்சன் சிக்ஸர்கள் அடித்தார் என அப்போது அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ளூர் டி20 தொடரில் ஆட வந்துள்ள ஷேன் வாட்சன், வாசிம் அக்ரமிடம் அப்போது தான் மன்னிப்பு கேட்டதாக கூறி உள்ளார்.

காட்டுத்தீ பரவியது

காட்டுத்தீ பரவியது

ஆஸ்திரேலியாவில் இரு மாதங்கள் முன்பு காட்டுத்தீ பரவியது. அதில் சுமார் 100 கோடி பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்தன. ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்தனர். அவர்களுக்கு உதவ முன் வந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைப்பு.

நிவாரண நிதி போட்டி

நிவாரண நிதி போட்டி

அதற்காக சிறப்பு நிவாரண நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றனர். மேலும், வாசிம் அக்ரம், பிரையன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்களும் பங்கேற்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

ரிக்கி பாண்டிங் லெவன் அணிக்கும், கில்கிறிஸ்ட் லெவன் அணிக்கும் இடையே 10 ஓவர் போட்டி நடந்தது. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்பட்டார். சச்சின், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இடைவேளையின் போது ஒரே ஒரு ஓவர் பேட்டிங் செய்தார்.

வாட்சன் அதிரடி

வாட்சன் அதிரடி

பாண்டிங் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்களில் 104 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய கில்கிறிஸ்ட் அணிக்கு வாட்சன் மின்னல் வேக துவக்கம் அளித்தார். 9 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார் அவர். 3 சிக்ஸர்கள், 2 ஃபோர் அடித்தார்.

வாசிம் அக்ரம் ஓவர்

வாசிம் அக்ரம் ஓவர்

பாண்டிங் அணியில் ஆடிய வாசிம் அக்ரம் வீசிய இரண்டாவது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்து மிரள வைத்தார் ஷேன் வாட்சன். தலைசிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக கருதப்படும் வாசிம் அக்ரம் பந்துவீச்சை அவர் சிதற வைத்தது கிரிக்கெட் அரங்கில் தலைப்பு செய்தியாக மாறியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

வாசிம் அக்ரம் தன் முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அவர் தன் இரண்டாவது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாலும், வாட்சன் அவரை அனாயசமாக சந்தித்தது, அடித்து ஆடியது வியப்பை அளித்தது.

இளமைக் கால ஹீரோ

இளமைக் கால ஹீரோ

இது குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் ஆட இருக்கும் ஷேன் வாட்சன் பேசிய போது தன் இளமைக் கால ஹீரோ வாசிம் அக்ரம் என்றும், அவர் ஓவரில் அடித்து ஆடியதை எண்ணி தான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.

மன்னிப்பு கேட்டேன்

மன்னிப்பு கேட்டேன்

வாட்சன் கூறுகையில், "நான் அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். வாசிம் என் ஹீரோக்களில் ஒருவர். இப்போதும் அவர் தரமான மனிதராக இருக்கிறார். குறிப்பாக, அந்த இரண்டாவது சிக்ஸர் மேலே சென்ற உடன் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். அக்ரமிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டேன்" என்றார்.

டி20 ஸ்பெஷலிஸ்ட்

டி20 ஸ்பெஷலிஸ்ட்

2016 டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ஷேன் வாட்சன் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட் என கூறும் அளவுக்கு ரன் வேட்டை நடத்தியும் வருகிறார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடுகிறார்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடுகிறார்

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 12 போட்டிகளில் 430 ரன்கள் குவித்தார் வாட்சன். க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்கு ஆடிய அவர் நான்கு அரைசதங்கள் அடித்தார். இந்த ஆண்டு மீண்டும் அந்த தொடரில் ஆட உள்ளார். அடுத்ததாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட இருக்கிறார் ஷேன் வாட்சன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shane Watson asks apology after hitting sixes in Wasim Akram over in Bushfire Big Appeal charity match
Story first published: Wednesday, February 19, 2020, 19:47 [IST]
Other articles published on Feb 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X