For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் ஆட வந்தாலே டிவியை தானா ஆன் பண்ணுவோம்... அதெல்லாம் மறக்கமுடியாத ஒன்று.. ஷேன் வாட்சன் ஓபன் டாக்

ஆஸ்திரேலியா: ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் சந்தித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் தற்போது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடர் குறித்த தனியார் தொலைக்காட்சி கேள்விகளுக்கு முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், தன் கிரிக்கெட் வாழ்வில் கோலி, டிவில்லியர்ஸ், ராஜஸ்தான் அணி மிக முக்கியமானவர்கள் என வாட்சன் தெரிவித்துள்ளார்.

வாட்சன்

வாட்சன்

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான ஷேன் வாட்சன், ஐபிஎல்-ல் பலருக்கும் பிடித்த வீரராவார். கடந்த ஐபிஎல் சீசனுடன் அனைத்து வித போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து 8 ஆண்டுகள் ராஜஸ்தான் அணிக்கு 2 ஆண்டுகள் பெங்களூரு அணிக்கும் 4 ஆண்டுகள் சென்னை அணிக்கும் ஆடியுள்ளார்.

சிறந்த மனிதர்

சிறந்த மனிதர்

விராட் கோலி குறித்து பேசியது வாட்சன், எனது கிரிக்கெட் வாழ்வில் முக்கிய தருணங்களில் விராட் கோலியுடன் இணைந்து ஆடியது. அவர் ஒரு சுவாரஸ்யமான மனிதர். இதே போல் ஏ.பி.டிவில்லயர்ஸும் மிக முக்கியமானவர். அவர் விளையாடும் போது நாம் தானாக டிவியை ஆன் செய்வோம்.

தொடக்கம்

தொடக்கம்

ராஜஸ்தான் ராயல் எனக்கு ஒரு நல்ல தொடக்கம். நான் காயத்தால் பாதிக்கப்பட்டு 2, 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் நுழையாமல் இருந்தேன். அப்போது சர்வதேச போட்டிகளில் மீண்டும் நான் ஆட ராஜஸ்தான் மிகவும் உதவியது. குறிப்பாக என்னை வழி நடத்தியது என்று கூறலாம் என வாட்சன் தெரிவித்தார்.

அனுபவம்

அனுபவம்

ஐபிஎல்-ல் இதுவரை 145 போட்டிகளில் ஆடியுள்ள ஷேன் வாட்சன் 3,874 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதம், 21 அரை சதங்கள் அடங்கும். இதே போல பந்துவீச்சில் 92 விக்கெட்களை எடுத்துள்ளார். இவரின் பெஸ்ட் பவுலிங் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்ததே ஆகும்.

Story first published: Friday, March 5, 2021, 11:38 [IST]
Other articles published on Mar 5, 2021
English summary
Shane Watson lauds former RCB teammate, shares his experience
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X