ஷர்துல் தாக்கூர் சிறப்பு... முகமது சிராஜ் சூப்பர்... பாராட்டிய முன்னாள் வீரர்

மும்பை : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஆடி முடித்துள்ள நிலையில் இந்தியா நாளை தொடரவுள்ளது.

இந்த இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் 9 விக்கெட்டுகளை ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இணைந்து எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் ஆட்டத்தின் மூலமே இந்த தொடர் உயிர்ப்புடன் உள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாளை நிறைவு

நாளை நிறைவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதிப்போட்டி நாளை 5வது நாள் ஆட்டத்துடன் நிறைவுபெற உள்ளது. நாளைய தினம் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர உள்ளது. ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களுடன் ஆடி முடித்துள்ளது.

9 விக்கெட்டுகள்

9 விக்கெட்டுகள்

இந்த 2வது இன்னிங்சின் 9 விக்கெட்டுகளை முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் எடுத்துள்ளனர். இருவரும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரை 294 ரன்களுக்குள் சுருட்டினர். இதையடுத்து இந்த போட்டி டிராவை நோக்கி சென்றுள்ளது. நாளைய ஆட்டத்தின்போது இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.

சச்சின் பாராட்டு

சச்சின் பாராட்டு

இந்நிலையில் ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் இருவருக்கும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் பௌலிங்கின் மூலம் இந்த போட்டி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தொடருமே உயிர்ப்புடன் உள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர் உயிர்ப்புடன் உள்ளது

முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுத்ததற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்த சச்சின், ஷர்துல் தாக்கூரின் ஆல்-ரவுண்டர் செயல்பாட்டிற்கும் இந்த போட்டியை சுவாரஸ்மாக கொண்டு செல்ல உதவியதற்காகவும் பாராட்டு கூறியுள்ளார். இவர்களது முயற்சியின்மூலம் இந்த தொடர் உயிர்ப்புடன் உள்ளதற்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Well done Siraj on your 1st fifer and Shardul on your important all round performance -Sachin
Story first published: Monday, January 18, 2021, 18:17 [IST]
Other articles published on Jan 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X