For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜனுக்கு நடந்த கொடுமை.. யார் தட்டிக் கேட்டார்கள்? ஆண்டர்சன் - பும்ரா விவகாரத்தில் ஷர்துல் ஆவேசம்

சென்னை: டெஸ்ட் போட்டியின் போது நடராஜனுக்கு நடந்த கொடுமை குறித்து ஷர்துல் தாக்கூர் மனம் திறந்துள்ளார்.

Recommended Video

Australia தொடரில் Natarajan-க்கு நடந்த போது யார் கேட்டது? Shardul Thakur ஆவேசம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க 5வது டெஸ்ட் போட்டியானது கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

2022ம் ஆண்டு ஜூலையில் 5வது டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள புதிய திட்டம்.. ஒருநாள், டி20ம் உண்டு - விவரம்2022ம் ஆண்டு ஜூலையில் 5வது டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள புதிய திட்டம்.. ஒருநாள், டி20ம் உண்டு - விவரம்

வீரர்களின் மோதல்

வீரர்களின் மோதல்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அடிக்கடி பிரச்னைகள் இருந்து வந்தன. இரு அணி வீரர்களும் வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடையே முதலில் ஏற்பட்ட பிரச்னை பின்னர் ஒட்டுமொத்த அணி மோதலாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணி வீரர்களை இங்கிலாந்து வீரர்கள் வம்புக்கு இழுத்தது குறித்து வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

நடராஜன் சந்தித்த கொடுமை

நடராஜன் சந்தித்த கொடுமை

டெய்ல் எண்டர்களாகிய நாங்கள் வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங் செய்யும் போது பெரிம் சிரமங்களை சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவில் கூட எங்கள் அணியின் கடைசி வீரரான நடராஜனுக்கு எதிராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் கடுமையான பவுன்சர்களை வீசினர். அப்படி நாங்கள் எதிர் கொண்டதை தான் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக செய்தோம்.

ஷர்துலின் கேள்வி

ஷர்துலின் கேள்வி

அயல்நாட்டு வீரர்கள் எங்களுக்கு எதிராக ஆக்ரோஷ பந்துகளை வீசுவது சரி என்றால் அதையே நாங்கள் திருப்பி செய்தால் தவறா ? நாங்கள் ஏன் பவுன்சர் பந்துகளை வீச கூடாது ? பாடி லைன் பந்துகளை ஏன் வீசக்கூடாது ? நாங்கள் யாரையும் திருப்திபடுத்த விளையாடவில்லை. வெற்றி பெறவே நாங்கள் விளையாடுகிறோம் என்று ஷரதுல் தாகூர் கூறியுள்ளார்.

வெற்றியாளர்

வெற்றியாளர்

அடுத்தடுத்த வார்த்தை மோதல்களுடன் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. எனினும் இரு அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்தானதால் இந்த தொடரில் யார் வெற்றி பெற்றார்கள் என்று இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

Story first published: Friday, September 17, 2021, 13:30 [IST]
Other articles published on Sep 17, 2021
English summary
Shardul Thakur breaks silence on fights between England tail enders
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X