“லார்ட்” ஷர்துலின் நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார்..திருமணம் எப்போது தெரியுமா

மும்பை: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தற்போது சர்வதேச போட்டிகளிலும் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியில் கூட ஷர்துல் தாக்கூர் இடம்பெற்றிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

“இதில் ஒரு பெருமையா?”.. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த புஜாரா.. விளாசி தள்ளும் ரசிகர்கள்! “இதில் ஒரு பெருமையா?”.. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த புஜாரா.. விளாசி தள்ளும் ரசிகர்கள்!

திருமணம்

திருமணம்

இந்நிலையில் ஷர்துல் தாக்கூருக்கு இன்று ஸ்பெஷல் தினமாக அமைந்துள்ளது. அதாவது, ஷர்துல் தாக்கூருக்கும் - மித்தாலி பருல்கர் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

எப்போது திருமணம்?

எப்போது திருமணம்?

மும்பையில் உள்ள கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 75 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமணம் 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Deepak, Ishan in India A Squad! Shardul could be added | IND A vs SA A | OneIndia Tamil
அடுத்த டி20 உலகக்கோப்பை

அடுத்த டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை தொடர் சமீபத்தில் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்தாண்டுக்கான உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணிலேயே நடைபெறவிருக்கிறது. இந்த தொடரிலும் ஷர்துல் தாக்கூர் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தன்னை நிரூபித்து விட்டு திருமணம் செய்துக்கொள்வேன் என்பதை போல ஷர்துல் முடிவெடுத்துள்ளதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

கிரிக்கெட் பயணம்

கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷர்துல் தாக்கூர் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 23 டி20 போட்டிகளில் 31 விக்கெட்களும், 4 டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். வரும் காலங்களில் முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களின் இடங்களை ஷர்துல் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shardul Thakur set to get engaged with his girl friend, will tie the knot after T20 WC 2022
Story first published: Monday, November 29, 2021, 14:17 [IST]
Other articles published on Nov 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X