For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் அடித்து நொறுக்கிய தமிழக வீரர் ஷாரூக்கான்…!!

தும்பா: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக பி.சி.சி.ஐ. நடத்தும் பிரதான உள்ளூர் தொடர் தான் விஜய் ஹசாரே கோப்பைத் தொடர்.

38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

மும்பை அணியில் பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இல்லை.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

தும்பாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் 24 ரன்களும்,கேப்டன் ஜெகதீசன் 20 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய பாபா இந்தரஜித் பொறுப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 32 ரன்களும்,கௌசிக் 32 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 38வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணி தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ஷாரூக்கான் வழக்கம் போல் தனது அதிரடியை காட்ட தொடங்கினார்.

ஷாரூக்கான் அதிரடி

ஷாரூக்கான் அதிரடி

தமிழ்நாடு அணிக்கு இந்த இலக்கு போதாது என்பதை அறிந்த அவர் மும்பை பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். எப்படி ஒரு புயல் சிறிது நேரத்திலேயே பாதிப்பை உண்டாக்கி செல்லுமோ, அதே போல் 35 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 66 ரன்கள் விளாசினார். இருப்பினும் 47வது ஒவரிலே ஆட்டமிழந்தார். இதனால் தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 290 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. எஞ்சிய 3 ஓவரிலும் ஷாரூக்கான் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் தமிழக அணி 300 ரன்களை எளிதாக கடந்திருக்கும்

Recommended Video

Shahrukh Khan can play all three formats, says Wasim Jaffer | Oneindia Tamil
ஐ.பி.எல் தொடர்

ஐ.பி.எல் தொடர்

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி ஷாரூக்கானை தக்கவைக்கவில்லை. பொலார்ட் போல் பந்துவீச்சாளர்களை பொளக்கும் ஷாரூக்கான் அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல பார்மில் இருக்கும் ஷாரூக்கானை இந்திய அணியில் சேர்த்து, அவரது திறமையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, December 8, 2021, 23:00 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
Sharukh khan Brilliant innings in vijay hazare trophy Put Tamil Nadu in Driving seat. Sharukh khan Who faced 35 balls scored 66 Runs vs Mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X