இன்னா அடி அடிக்கறாருய்யா... இந்த சீசன்ல முதல் வீரரா ஷிகர் செஞ்ச சாதனையை பாருங்க...

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இன்றைய போட்டியில் 42 பந்துகளில் 45 ரன்களை அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் அடித்திருந்தார்.

மேலும் இன்றைய போட்டியின்மூலம் ஆரஞ்சு கேப் ஓட்டத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் அவர் மேலும் ஒரு சாதனையையும் செய்துள்ளார்.

மோசமாக சொதப்பிய மும்பை.. அதிர வைத்த அமித் மிஸ்ரா.. 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த செய்த மும்பைஇந்தியன்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி 138 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இலக்காக கொடுத்தனர்.

ஸ்மித்துடன் பார்ட்னர்ஷிப்

ஸ்மித்துடன் பார்ட்னர்ஷிப்

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிரித்வி ஷா ஏமாற்றம் அளித்த நிலையில் ஷிகர் தவான் 14.5 ஓவர்கள் வரை மைதானத்தில் நிலைத்து நின்று ஆடினார். ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்தார்.

4 போட்டிகளில் 213 ரன்கள்

4 போட்டிகளில் 213 ரன்கள்

டெல்லி அணிக்காக கடந்த 4 போட்டிகளில் விளையாடிவரும் ஷிகர் தவான் தொடர்ந்து தனது அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த பஞ்சாப் அணிக்கு எதிராக 92 ரன்களை அடித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். இந்நிலையில் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியிலும் 42 பந்துகளில் 45 ரன்களை குவித்துள்ளார்.

முதலிடத்தில் ஷிகர்

முதலிடத்தில் ஷிகர்

இதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம். ஏற்கனவே இந்த ஐபிஎல்லில் ஆரஞ்ச் கேப்பிற்கான ஓட்டத்தில் முதலிடத்தில் உள்ள ஷிகர், இன்றைய போட்டியின்மூலம் 213 ரன்களை அடித்து முதலிடத்தை தொடர்ந்து வருகிறார். இதில் இரண்டு அரைசதங்களும் அடககம். இதன்மூலம் இந்த சீசனில் முதலில் 200 ரன்களை அடித்துள்ள வீரர் என்ற பெருமை ஷிகருக்கு கிடைத்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhawan completes 200 runs in IPL 2021, extends lead in Orange Cap leaderboard
Story first published: Tuesday, April 20, 2021, 23:37 [IST]
Other articles published on Apr 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X