For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு உதவியா.. தேசத்திற்காக தவான் செய்த விஷயங்கள்.. ரசிகர்களிடம் குவியும் பாராட்டுக்கள்!

டெல்லி: கொரோனா நிவாரணத்திற்காக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அடுத்தடுத்து செய்து வரும் உதவிகள் ரசிகர்கள் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

 மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல் மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் அடைந்து வருகிறது. ஆக்சிஜன், மருத்துவமனை உபகரணங்கள் ஆகியைவைகாக மக்கள் போராடி வருகின்றனர்.

கிரிக்கெட்டர்களின் உதவி

கிரிக்கெட்டர்களின் உதவி

இதற்காக கிரிக்கெட் உலகை சேர்ந்த சச்சின், விராட் கோலி, நிகோலஸ் பூரண், பேட் கம்மின்ஸ், பிரட் லீ ஆகியோர் உதவி செய்திருந்தனர். ஆனால் ஷிகர் தவான் ஒரு முறை நிவாரணம் வழங்கியதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனா நன்கொடை

கொரோனா நன்கொடை

ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவான், சமீபத்தில் கொரோனா முதல் தவனை தடுப்பூ செலுத்திக் கொண்டார். ஏற்கெனவே கொரோனா நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய அவர், அதுப்போக, ஐபிஎல் 2021 தொடரில் அவர் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்டதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக அளித்தார்.

அடுத்த உதவி

அடுத்த உதவி

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஆக்சிஜன் கான்சன்டேட்டர்களை வழங்கியுள்ளார். அவற்றினை குருகிராம் நகர காவல்துறையினருக்கு அவர் அனுப்பிவைத்தார். இதுகுறித்த புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

தவானின் நம்பிக்கை

தவானின் நம்பிக்கை

இதற்கு பதிலளித்துள்ள ஷிகர் தவான், தற்போதுள்ள கடினமானச் சூழலில் இது போன்ற சிறு உதவிகளைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என் நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். கொரோனாவுக்கு எதிரான பேரழிவில் இருந்து இந்தியா மீண்டு வந்து மீண்டும் ஜொலிக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்தாண்டு ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடிய ஷிகர் தவான்,அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்கிறார். ஆனால் அடுத்து வரக்கூடிய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தேசத்திற்காக பல்வேறு உதவிகளை செய்துவரும் தவான், தற்போது ஃபுல் ஃபார்மில் இருக்கும்போதும் அவருக்கு தேசத்திற்காக ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

Story first published: Sunday, May 16, 2021, 15:44 [IST]
Other articles published on May 16, 2021
English summary
Shikhar Dhawan donates oxygen concentrators to Gurugram police
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X