For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அங்கதான் எல்லாம் தலைகீழா மாறிச்சு” இந்தியாவின் வரலாற்று தோல்விக்கான காரணம்.. ஷிகர் தவான் விளக்கம்

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமாக தோற்றதற்கு என்ன காரணம் என கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் அளித்துள்ளார்.

இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி.. 221 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. பொளந்துக்கட்டிய நியூசிலாந்து அணி!வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி.. 221 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. பொளந்துக்கட்டிய நியூசிலாந்து அணி!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருந்தது. ஆனால் வில்லியம்சன் - டாம் லாதம் ஜோடி அதற்கு தடைக்கல் போட்டனர். நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் 22 ரன்களுக்கும், டெவோன் கான்வே 24 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த 11 என ஏமாற்ற, நியூசிலாந்து அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா எப்படியும் வென்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர்.

சிறந்த பார்ட்னர்ஷிப்

சிறந்த பார்ட்னர்ஷிப்

3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - டாம் லாதம் ஜோடி இந்தியாவுக்கு ஆட்டம் காட்டினர். இந்திய பவுலர்கள் எவ்வளவு முயன்றும் கடைசி வரை அவர்களை பிரிக்கவே முடியவில்லை. சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களை விளாசினார். மறுபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களை குவித்தார். சேஸிங்கின் போது அதிக அமைக்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ( 221 ரன்கள்) இதுவாகும்.

ஷிகர் தவான் விளக்கம்

ஷிகர் தவான் விளக்கம்

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் தந்துள்ளார். அதில், நாங்கள் நிர்ணயித்த இலக்கு சிறப்பான ஒன்று தான். இன்று நாங்கள் நிறைய ஷார்ட் லெந்த் பந்துகளை வீசியதால் டாம் லாதம் அடித்து ஆட தொடங்கிவிட்டார். குறிப்பாக 40வது ஓவரில் தான் எங்கள் கையை விட்டு ஆட்டம் சென்றது. பேட்ஸ்மேன்களை, அவர்களது பலமான இடங்களில் இருந்து அடிக்கவிடக்கூடாது. ஆனால் இன்று அது நடந்தது. எனவே இனி அதற்கு நீண்ட திட்டத்துடன் வரவேண்டும் என தவான் கூறினார்.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

இந்த இலக்குடன் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம். எனினும் வெற்றி, தோல்வி சகஜம் தான். பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் இந்தியாவின் இளம் வீரர்கள் இதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆட்டத்தில் சரியாக திட்டமிடாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. முதல் 10 - 15 ஓவர்கள் பிட்ச் வித்தியாசமாக செயல்பட்டது. அதற்கு தகுந்தாற்போல திட்டமிட்டிருக்க வேண்டும்.

Story first published: Friday, November 25, 2022, 17:24 [IST]
Other articles published on Nov 25, 2022
English summary
Captain Shikhar dhawan explanation for the Team India's Lose to New Zealand in 1st ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X