உங்களால் குடும்பத்தை துபாயிலேயே விட்டுவிட்டேன்.. டிவிட்டரில் கோபம் காட்டிய ஷிகர் தவான்

கேப் டவுன்: இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மொத்தம் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மட்டும் 3 டி-20 போட்டிகள் விளையாடும். இதில் விளையாட இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று இருக்கிறது.

இன்று காலை மும்பையில் இருந்து துபாய் வழியாக ஷிகர் தவான் தென்னாபிரிக்க சென்று இருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்திற்கு மட்டும் விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

மும்பையில் இருந்து துபாய் வரை செல்ல ஷிகர் தவான் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் துபாயில் 'பிளை எமிரேட்ஸ்' நிறுவனம் ஷிகர் தவான் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை கேட்டு உள்ளது. தாவன் எவ்வளவு பேசியும் அவர்களை விமானத்தில் அனுமதிக்காமல் போய் உள்ளனர். இதனால் அவர் மட்டும் தனியாக தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்.

கோபம்

இதுகுறித்து அவர் டிவிட்டரில் ''கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. தென்னாப்பிரிக்கா சென்று கொண்டு இருந்தேன். என் குழந்தைகளும், மனைவியும் பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தால் விமானத்தில் செல்ல முடியாது என்று கூறிவிட்டார்கள். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காத்திருப்பு

அதற்கு அடுத்த டிவிட்டில் ''அவர்கள் இப்போது துபாயில் இருக்கிறார்கள். எல்லா சான்றிதழும் வருவதற்காக காத்து இருக்கிறார்கள். ஏன் மும்பையில் இருந்து புறப்படும் போதே இந்த விதிமுறைகள் குறித்து 'பிளை எமிரேட்ஸ்' நிறுவனம் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அதிலும் ஒரு பணியாளர் எங்களிடம் கோபமாக நடந்து கொண்டார்'' என்றும் கூறியுள்ளார்.

பதில்

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனம் ''இதை கேட்க எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இதுகுறித்து நாங்கள் மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இதுகுறித்த விவரங்களை எங்களுக்கு மேலும் அனுப்ப முடியுமா' என்று கேட்டு இருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India opener Shikhar Dhawan and family had to undergo an unexpected ordeal at the Dubai airport en route South Africa. The episode forced Dhawan to lash out at the airlines - Emirates- through his official twitter account in a two-part series. "Absolutely unprofessional from emirates. Was on my way 2 SA with my fam & was told tht my wife and kids can't board the flight from Dubai to SA. Was asked to produce birth certificates & other documents fr my kids at the airport which we obviously didn't have at that moment." and ''.They are now at Dubai airport waiting for the documents to arrive. Why didn't emirates notify about such a situation when we were boarding the plane from Mumbai? One of the emirates' employee was being rude for no reason at all.'' in his tweet.
Story first published: Friday, December 29, 2017, 17:18 [IST]
Other articles published on Dec 29, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X