ஐபிஎல் பிளே ஆப்க்கு ஏன் செல்லவில்லை.. ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வீடியோ இதோ

டெல்லி: ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வீடு திரும்பியதால், தனது தந்தை அடித்து, உதைத்ததாக ஷிகர் தவான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய ஷிகர் தவான், 14 போட்டியில் களமிறங்கி 460 ரன்கள் அடித்துள்ளார்.

ஆனால், பஞ்சாப் அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய தொடரும் அறிவிக்கப்பட்டது.

இதிலும் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. ரோகித் இல்லாத நிலையில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 460 ரன்கள் அடித்தும் தவானை இந்திய அணியில் தேர்வுக்குழுவினர் சேர்க்கவில்லை. தினேஷ் கார்த்திக்கால் கம்பேக் கொடுக்கும் போது ஏன் தவானுக்கு வாய்ப்பு தரவில்லை என்று சுரேஷ் ரெய்னாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஷிகர் தவான் ஐபிஎல் லீக் சுற்றுகள் முடிந்து வீடு திரும்பினார். அப்போது, ஷிகர் தவானின் தந்தை திடீரென்று தவானை அடித்து, கீழே தள்ளி உதைத்தது போல் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியானது. ஐபிஎல் தொடரில் பிளே ஆப்க்கு செல்லாததால் தந்தையிடம் அடி வாங்கினேன் என்று தவானும் கூறி இருந்தார்.

பிறகு தான் தெரிந்தது. அது நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட டப்ஸ்மேஷ் வீடியோ என்று.. இதனை அறிந்ததும் ரசிகர்கள் சிரித்து, அதனை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர். தவானும், அவரது தந்தையும் சூப்பராக நடிப்பதால் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shikhar dhawan insta reels attracted fans attention over IPL Performance ஐபிஎல் பிளே ஆப்க்கு ஏன் செல்லவில்லை.. ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வீடியோ இதோ
Story first published: Thursday, May 26, 2022, 15:38 [IST]
Other articles published on May 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X