சாதனை நாயகன் பட்டியலில் ஷிகர் தவான்.. சச்சின், சேவாக் வரிசையில் இடம்.. உலககோப்பை அணியில் இடம் உறுதி?

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சாதனை நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

Recommended Video

IND vs ZIM 1st ODI தோல்வி குறித்து Regis Chakabva வேதனை *Cricket

இந்திய அணியில் சேவாக், சச்சின் ஓய்வுக்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான், தனது இடத்தை அணியில் உறுதி செய்தார்.

ஐசிசி தொடர்களில் பட்டையை கிளப்பும் தவான், இந்திய அணியின் பல்வேறு வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.

ஷிகர் தவானுக்கு பொறுப்பு

ஷிகர் தவானுக்கு பொறுப்பு

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பினார். டெஸ்ட் போட்டியில் தவான் இடம்பெறுவது இல்லை என்பதால், சீனியர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கும் போது எல்லாம் ஷிகர் தவானை தான் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்து பிசிசிஐ ஜூனியர்களை வழிநடத்தும் பொறுப்பை வழங்கியது.

பட்டையை கிளப்பிய தவான்

பட்டையை கிளப்பிய தவான்

ஐபிஎல் தொடர்கள் மூலம் இழந்த பார்மை மீட்ட ஷிகர் தவான், ரோகித் சர்மாவின் ஆதரவோடு மீண்டும் இந்தியாவின் நம்பர் அணியிலும் இடம் பிடித்தார். இடம் பிடித்தது மட்டுமல்லாது, பழைய அதிரடி ஆட்டத்தையும் தவான் வெளிப்படுத்தி, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரையும் தவான் தலைமையிலான அணி, வெற்றி பெற்றது.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் சாதனை நாயகன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்த விசேஷ பட்டியலில் 6500 ரன்களுக்கு மேல் தொடக்க வீரர்களாக அடித்தவர்களே உள்ளனர்.

உலககோப்பையில் தவான்

உலககோப்பையில் தவான்

முதலிடத்தில் சச்சின் 15310 ரன்களுடனும், கங்குலி 9146 ரன்களுடனும், ரோகித் சர்மா 7409 ரன்களுடனும், சேவாக் 7240 ரன்களுடனும், ஷிகர் தவான் 6501 ரன்களுடனும் உள்ளனர். இந்த நிலைவயில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவானே தொடக்க வீரராக களமிறங்கவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shikhar Dhawan Joined elite club as an Indian opener with legends சாதனை நாயகன் பட்டியலில் ஷிகர் தவான்.. சச்சின், சேவாக் வரிசையில் இடம்.. உலககோப்பை அணியில் இடம் உறுதி?
Story first published: Friday, August 19, 2022, 10:30 [IST]
Other articles published on Aug 19, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X