என்னையா டீம்விட்டு தூக்குனீங்க..!! பேட்டால் பதில் சொன்ன ஷிகர் தவான்..!! IND vs SA 1st ODI

பார்ல்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் 6 மாதங்களுக்கு பிறகு ஷிகர் தவான் களமிறங்கினார்.

“204 ரன்கள் பார்ட்னர்ஷிப்”.. வள்ளல்களாக மாறிய இந்திய பவுலர்கள்.. கடின இலக்கால் திகைத்து போன இந்தியா!“204 ரன்கள் பார்ட்னர்ஷிப்”.. வள்ளல்களாக மாறிய இந்திய பவுலர்கள்.. கடின இலக்கால் திகைத்து போன இந்தியா!

தவான் ஃபார்ம்

தவான் ஃபார்ம்

முதல் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய கே.எல்.ராகுல் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஷிகர் தவான், விராட் கோலி ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை ஈடுபட்டது. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 20 ரன்களுக்கு மேல் கூட அடிக்காத தவான், என்ன செய்ய போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது

பழைய ஆட்டம்

பழைய ஆட்டம்

ஆனால் ஷிகர் தவான், தனது வழக்கமான பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு, தனது டிரெட் மார்க் சாட்களை ஆடினார். விராட் கோலியும் அவருக்கு துணை நிற்க, இந்திய அணியின் ரன்கள் மளமளவென உயரத் தொடங்கியது.

ஷிகர் தவான் 79

ஷிகர் தவான் 79

ஷிகர் தவான் 51 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை தவான் வெளிப்படுத்த, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை உணர தொடங்கினர். சிறப்பாக விளையாடிய தவான் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.

ஏன் நீக்கம்?

ஏன் நீக்கம்?

ஷிகர் தவான் நல்ல ஃபார்மில் இருந்த போது அவர் ஏன் டி20, ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஐ.சி.சி. தொடர்களில் கலக்கும் தவான், டி20 உலகக் கோப்பையில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என தங்கத்தை தேடி வைரத்தை இந்தியா இழந்தது. தற்போது தனது பேட் மூலம் தவான் அதற்கு நல்ல பதிலை தந்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shikhar Dhawan Performed well and cemented his place as opener என்னையா டீம்விட்டு தூக்குனீங்க..!! பேட்டால் பதில் சொன்ன ஷிகர் தவான்..!! IND vs SA 1st ODI
Story first published: Wednesday, January 19, 2022, 21:07 [IST]
Other articles published on Jan 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X