இது உலக நடிப்புடா சாமி.. தவான் - சுந்தர் செய்த பரிதாபங்கள் ரீல்ஸ்.. இணையத்தில் சிரிப்பலை - வீடியோ!

பெங்களூரு: இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவிருக்கிறது.

டி20 உலககோப்பை- இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த பாக். வீரர் ஹரிஸ் ரவுஃப்.. என்னவாம் ?டி20 உலககோப்பை- இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த பாக். வீரர் ஹரிஸ் ரவுஃப்.. என்னவாம் ?

தென்னாப்பிரிக்க டூர்

தென்னாப்பிரிக்க டூர்

ரோகித் சர்மா படை ஆஸ்திரேலியா செல்வதால், ஷிகர் தவான் தலைமையில் தான் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி உருவாக்கப்படவுள்ளது. எனினும் பும்ராவின் விலகலால் அணி தேர்வு குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்னும் நடைபெறாமலேயே உள்ளது. இந்த கவலையில் ரசிகர்கள் உள்ள நிலையில் தவான் மட்டும் தனது குசும்பு தனத்தை விடவே இல்லை.

ஷிகர் தவானின் குசும்பு

ஷிகர் தவானின் குசும்பு

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஷிகர் தவான் அவ்வபோது இன்ஸ்டா ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுவார். அந்தவகையில் தற்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து செய்துள்ளார். தமிழ் யூட்டியூப் சேனலான பரிதாபங்களில் வரும் ஒரு காட்சியை இருவரும் சேர்ந்து காமெடி செய்துள்ளது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவை வீடியோ

நகைச்சுவை வீடியோ

ஷிகர் தவானுக்கு வாஷிங்டன் சுந்தர் தலையில் மசாஜ் செய்து விடுவது போன்றும், அப்போது "வெள்ளிக்கிழமை மங்கலம் பொங்க" என்ற பாடலை பாடிக்கொண்டு நடித்துள்ளனர். இந்த தமிழ் வரிகளை ஷிகர் தவானும் கற்றுக்கொண்டு, உதடு அசைவுகளை சரியாக கொடுத்துள்ளார்.

சுந்தரின் உடல்நிலை

சுந்தரின் உடல்நிலை

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் சுந்தருக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shikhar dhawan - washington sundar makes a Tamil Reels, getting trend on Internet
Story first published: Friday, September 30, 2022, 13:54 [IST]
Other articles published on Sep 30, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X