For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

139 ரன்கள்.. அனுபவித்து சதம் அடித்து.. இந்தியாவை தோற்கடித்த ஆட்டநாயகன் ஹெட்மயர்!

சென்னை : இந்தியாவிற்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

288 என்ற கடுமையான இலக்கை இந்திய அணி கொடுத்த போதிலும் மேற்கிந்திய தீவுகள் அணி அதை பதற்றமே இல்லாமல் வெகு எளிதாக மேற்கொண்டு, வெற்றியடைந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரர்கள் சிம்ரன் ஹெட்மயர் மற்றும் சாய் ஹோப்பின் சதங்கள் அணியின் வெற்றியை எளிதாக அடைய உதவி புரிந்தன.

 எளிதான வெற்றியடைந்த மே.இ.தீ

எளிதான வெற்றியடைந்த மே.இ.தீ

இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 47வது ஓவரில் வெற்றி

47வது ஓவரில் வெற்றி

இந்த போட்டியில் இந்தியாவின் 287 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 47வது ஓவரிலேயே வெற்றியை சுவைத்தது.

 பார்ட்னர்ஷிப்பில் கலக்கல்

பார்ட்னர்ஷிப்பில் கலக்கல்

இந்தப் போட்டியில் சிம்ரன் ஹெட்மயர் மற்றும் சாய் ஹோப் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 218 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இருவருமே சதமடித்து தங்களது அணியின் எளிதான வெற்றிக்கு உதவினர்.

 இளம் வீரர் ஹெட்மயர் பேச்சு

இளம் வீரர் ஹெட்மயர் பேச்சு

இந்நிலையில், தன்னுடைய ஆட்டத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அனுபவித்து ஆட தான் விரும்புவதாக சிம்ரன் ஹெட்மயர் தெரிவித்துள்ளார்.

 106 பந்துகளில் 139 ரன்கள்

106 பந்துகளில் 139 ரன்கள்

தன்னுடன் பார்ட்னர்ஷிப்பில் விளையாடிய ஹோப்புடன் விளையாடுவது மிகச்சிறந்த அனுபவம் என்று தெரிவித்துள்ள ஹெட்மயர், தன்னை பொறுத்தவரை வேகமாக விளையாடுவதே பிரதானமாக உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் 106 பந்துகளில் 139 ரன்கள் அடித்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 மகிழ்ச்சி தெரிவித்த ஹெட்மயர்

மகிழ்ச்சி தெரிவித்த ஹெட்மயர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தற்போது எடுத்துள்ள 139 ரன்களே தான் அடித்துள்ள மிகப்பெரிய ரன் என்று மகிழ்ச்சி தெரிவித்த ஹெட்மயர், எப்போதுமே எதிரணியின் ரன்களை சேஸ் செய்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறியுள்ளார்.

 நாளை மறுநாள் 2வது போட்டி

நாளை மறுநாள் 2வது போட்டி

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா இடையிலான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

Story first published: Monday, December 16, 2019, 13:20 [IST]
Other articles published on Dec 16, 2019
English summary
Shimron Hetmyer wants to enjoy his Batting as much as possible
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X