For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பந்துகளில் 6 பவுண்டரிகள்... ஷா அதிரடி... பழிதீர்த்துக் கொண்ட கேகேஆர் பௌலர்!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் கேகேஆர் -டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Shivam Mavi punishing Prithvi Shaw for hitting him for 6 fours in an over | Oneindia Tamil

இந்த போட்டியில் 41 பந்துகளில் 82 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணயின் பிரித்வி ஷா அதிரடியாக அடித்திருந்தார்.

புல் ஷாட்னா அவர்தான் மாஸ்டர்... 34வது பிறந்தநாள்ல ஹிட்மேனுக்கு ஐசிசி பாராட்டு! புல் ஷாட்னா அவர்தான் மாஸ்டர்... 34வது பிறந்தநாள்ல ஹிட்மேனுக்கு ஐசிசி பாராட்டு!

இந்நிலையில் கேகேஆர் பௌலர் ஷிவம் மவி பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அவர் அதிரடியாக அடித்தார்.

25வது போட்டி

25வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 25வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய நிலையில 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது. இதற்கு முழு காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா அமைந்தார்.

6 பவுண்டரிகள்

6 பவுண்டரிகள்

கேகேஆர் பௌலர் ஷிவம் மவி தனது ஓவரின் முதல் பந்தை வைடாக போட்ட நிலையில், அடுத்த 6 பந்துகளிலும் 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் பிரித்வி ஷா அதிரடியாக அடித்தார். இதனால் மைதானமே அதகளம் பட்டது. இருவரும் இணைந்து கடந்த 2018 அன்டர் -19 உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

82 ரன்கள் குவிப்பு

82 ரன்கள் குவிப்பு

பிரித்வி ஷா அதிரடியாக 41 பந்துகளில் 82 ரன்களை நேற்றைய தினம் குவித்திருந்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றி எளிதாக அமைந்தது. ஷிகர் தவானும் நேற்றைய போட்டியில் 46 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து 16.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது டெல்லி அணி.

தப்பிய ஷா

போட்டி முடிந்தவுடன் பிரித்வி ஷாவிற்கு அதிரடி காத்திருந்தது. ஷிவம் மவி அவரது கழுத்தை பிடித்து வளைத்து அவரை செல்லமாக கழுத்தை நெறுக்கி பழி தீர்த்துக் கொண்டார். இதனால் ஷா வளைந்து நெளிந்து அதிலிருந்து தப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அவர்களது சிறப்பான நட்பை வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வை ஐபிஎல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆரோக்கியமான சூழல்

ஆரோக்கியமான சூழல்

ஐபிஎல் அணிகளுக்கிடையில் மட்டுமின்றி இந்திய அணியிலும் வீரர்கள் சிறப்பான நட்பை பராமரித்து வருகின்றனர். ஒரு சிலரிடம் சில விரோதங்கள் காணப்பட்டாலும் அணி வீரர்கள் நட்புடன் காணப்படுவதை மைதானத்தில் பார்க்க முடிகிறது. இது ஆரோக்கியமான சூழல்தான்.

Story first published: Friday, April 30, 2021, 19:14 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
Once the match is completed, friendship takes over
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X