For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

13 சச்சின் விக்கெட்.. 130 கோடி மக்களுக்காக ஒரு சிக்ஸர்.. பாக். வீரர் சொன்ன பொய்க் கணக்கு!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர், சச்சினை தான் 12 அல்லது 13 முறை ஆட்டமிழக்கச் செய்ததாக பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

Recommended Video

Shoaib Akhtar on Sachin’s six in 2003 World Cup

கொரோனா வைரஸ் வரும் முன்பே சோயப் அக்தர் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசி தன் யூட்யூப் சேனலை வளர்த்து வந்தார்.

கொரோனா வைரஸ் வந்த பின் மொத்த கிரிக்கெட் உலகமும் ஸ்தம்பித்துப் போனாலும், சோயப் அக்தர் மட்டும் "தினம் ஒரு தகவல்" என்கிற ரீதியில் தினமும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறார்.

ஆர்டர் போட்ட தோனி.. பஞ்சாயத்து செய்த கும்ப்ளே.. ஒரே நாளில் புது பவுலரை உருவாக்கிய ஜாம்பவான்கள்!ஆர்டர் போட்ட தோனி.. பஞ்சாயத்து செய்த கும்ப்ளே.. ஒரே நாளில் புது பவுலரை உருவாக்கிய ஜாம்பவான்கள்!

அக்தர் வீடியோ

அக்தர் வீடியோ

சமீபத்தில் சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவில் பேசிய சோயப் அக்தர், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வலம் வந்த சச்சின் டெண்டுல்கருடன் ஆன தன் அனுபவங்கள் மற்றும் அவரைக் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

என்ன சொன்னார் அக்தர்?

என்ன சொன்னார் அக்தர்?

அப்போது தான் சச்சினை தான் எத்தனை முறை வீழ்த்தி உள்ளேன் என ஒரு பொய்யான கணக்கை கூறினார். மேலும், சச்சின் தன் பந்து வீச்சில் அடித்த ஒரு சிக்ஸ்-ஐ குறிப்பிட்டு அது இந்தியாவின் 130 கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனவும் குறிப்பிட்டார்.

தம்பட்டம்

தம்பட்டம்

"நான் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்து வீசுவதில் நல்ல நேரத்தை கொண்டிருந்தேன். எந்த காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களுள் அவரும் ஒருவர். ஆனால், அவரை நான் 12 அல்லது 13 முறை வீழ்த்தியும் உள்ளேன்" என பொய்யாக தம்பட்டம் அடித்துக் கொண்டார் சோயப் அக்தர்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

உண்மையில், சச்சின் டெண்டுல்கரை 8 முறை தான் வீழ்த்தி உள்ளார் சோயப் அக்தர். ஒருநாள் போட்டிகளில் ஐந்து முறையும், டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறையும் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் அக்தர். ஐபிஎல் தொடரில் ஒரு முறை வீழ்த்தி உள்ளார்.

2003 உலகக்கோப்பை ஆட்டம்

2003 உலகக்கோப்பை ஆட்டம்

2003 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 98 ரன்கள் குவித்தார். அது பல ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத சச்சினின் பேட்டிங்களில் ஒன்றாக உள்ளது. அந்த இன்னிங்க்ஸில் அக்தர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் அடித்தார் சச்சின்.

அந்த ஒரு சிக்ஸர்

அந்த ஒரு சிக்ஸர்

"இருந்தாலும், இந்திய மக்கள் 2003 உலகக்கோப்பை தொடரில் சச்சின் என் பந்துவீச்சில் அடித்த ஒரு சிக்ஸரைத் தான் இன்னமும் நினைவில் வைத்துள்ளனர். அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது" என தன் பந்துவீச்சில் சச்சின் அடித்த சிக்ஸ் பற்றி பேசினார்.

சிக்ஸர் அடிக்க விட்டிருப்பேன்

சிக்ஸர் அடிக்க விட்டிருப்பேன்

"அந்த ஒரு சிக்ஸ் தான் 130 கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என தெரிந்து இருந்தால், தினமும் அவர் என் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் அடிக்க விட்டிருப்பேன்" எனவும் கூறினார் சோயப் அக்தர். அக்தர் சொல்வதைப் கேட்டால் நமக்கு இந்த சந்தேகம் எழுகிறது. சச்சின், அக்தர் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்தாரா? அல்லது அக்தர் தன் பந்துவீச்சில் சச்சினை சிக்ஸர் அடிக்க விட்டாரா?

Story first published: Saturday, April 18, 2020, 17:36 [IST]
Other articles published on Apr 18, 2020
English summary
Shoaib Akhtar claims he got out Sachin 12, 13 times. But, here is the truth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X