For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் நீங்க கிரிக்கெட் நடத்துற லட்சணமா? ஐசிசி ட்வீட்.. கிழித்து தொங்கவிட்ட வீரர்.. வெடித்த சர்ச்சை

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரை மோசமாக கேலி செய்து ஒரு ட்வீட் பதிவிட்டது.

Recommended Video

Shoaib Akhtar opposes ICC tweet on Smith

அதை சுட்டிக் காட்டி பொங்கி உள்ள சோயப் அக்தர், ஐசிசியின் நடுநிலைமையை கேள்வி கேட்டுள்ளார்.

மேலும், அந்த ட்வீட்டை உதாரணம் காட்டி அங்கே இப்படித் தான் கிரிக்கெட் நடவடிக்கைகள் ஒரு தலைபட்சமாக இருப்பதாக கடுமையாக சாடி உள்ளார்.

கடைசி நேரத்தில் சச்சின் சொன்ன ஐடியா.. ஒப்புக் கொண்ட தோனி.. 2011 உலகக்கோப்பை பைனல் பரபரப்பு!கடைசி நேரத்தில் சச்சின் சொன்ன ஐடியா.. ஒப்புக் கொண்ட தோனி.. 2011 உலகக்கோப்பை பைனல் பரபரப்பு!

ஆரம்பம் இதுதான்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கி இருக்கும் நிலையில் ஐசிசி அமைப்பு, சமூக வலைதளங்களில் வேடிக்கையாக கேள்வி கேட்டு ரசிகர்களை கிரிக்கெட்டுடன் நெருக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் 10 பேட்ஸ்மேன்கள் - 10 பவுலர்களை ஜோடியாக மாற்றி ஒரு பதிவை பகிர்ந்தது.

சுவாரசியமான ஜோடிகள்

சுவாரசியமான ஜோடிகள்

ஒவ்வொரு பேட்ஸ்மேன் - பவுலர் ஜோடியிலும் ஒருவர் ஓய்வு பெற்ற வீரராகவும், ஒருவர் தற்போது ஆடி வரும் வீரராகவும் இருந்தனர். அந்த ஜோடிகள் இவைதான் - விராட் கோலி - ஷேன் வார்னனே, பாபர் ஆசாம் மெக்கிராத், சயீத் அன்வர் - பும்ரா, கெவின் பீட்டர்சன் - ரபாடா, கேன் வில்லியம்சன் - முரளிதரன், ரிக்கி பாண்டிங் - ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் - சோயப் அக்தர், பிரையன் லாரா - நெய்ல் வாக்னர், சச்சின் - ரஷித் கான், ஏபி டிவில்லியர்ஸ் - வாசிம் அக்ரம்.

யாரை தேர்வு செய்வீர்கள்?

யாரை தேர்வு செய்வீர்கள்?

அனைவருமே தங்கள் காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள். அவர்கள் ஒரே நேரத்தில் கிரிக்கெட் ஆடி இருந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பி விடுவதே இந்த பதிவின் நோக்கம். அந்த 10 ஜோடியில் யாராவது ஒரு ஜோடியை மட்டுமே இப்போது பார்க்க முடியும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்டு இருந்தது ஐசிசி.

சோயப் அக்தர் என்ன சொன்னார்?

ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக தன் பெயர் இருப்பதை பார்த்த சோயப் அக்தர் கொஞ்சம் வாய் சவடால் விட்டார். இன்றும் கூட தான் மூன்று பவுன்சர்கள் வீசி, நான்காவது பதில் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்வேன் என கூறி இருந்தார்.

ஐசிசி கிண்டல்

இதை ரசிகர்கள் கிண்டல் செய்யலாம்.. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிண்டல் செய்யலாமா? அக்தர் பதிலை கண்டு நக்கலாக சிரிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு கிண்டல் செய்தது ஐசிசி. அதை ரசிகர்கள் சிலரே விமர்சித்து இருந்தனர்.

கோபத்தில் பொங்கிய அக்தர்

ஐசிசி பதிவை கண்ட சோயப் அக்தர் கோபத்தில் பொங்கினார். "இது ஒரு குறியீடான பதிவு. ஐசிசி எப்படி நடுநிலைமையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிவிட்டது. அடிப்படையில் இப்படித் தான் அங்கே கிரிக்கெட் விவகாரங்கள் நடத்தப்படுகின்றன" என கடுமையாக சாடி இருந்தார்.

மிரட்டல் வீடியோ

அது மட்டுமின்றி, அடுத்த சில மணி நேரங்களில் கடுமையாக காயம் ஏற்படுத்திய தன் பவுன்சர் பந்துவீச்சு வீடியோ தொகுப்பு ஒன்றை பகிர்ந்தார். அதில் பல பேட்ஸ்மேன்கள் அக்தர் பந்துவீச்சில் காயம் ஏற்பட்டு சுருண்டு விழும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

ஐசிசி விமர்சனம்

ஐசிசி விமர்சனம்

சோயப் அக்தர் சில மாதங்களாகவே கொஞ்சம் வாய் சவடால் விட்டு பேசி வருகிறார் என்பதை ரசிகர்களே ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவரை சர்வதேச கிரிக்கெட் அமைப்பு கிண்டல் செய்வதை யாரும் ரசிக்கவில்லை என்பதே உண்மை. ஐசிசி கடந்த காலத்தில் இந்திய வீரர்களையும் இப்படி கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 14, 2020, 20:27 [IST]
Other articles published on May 14, 2020
English summary
Shoaib Akhtar opposes ICC tweet over his claim of taking Steve Smith wicket in just 4 balls.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X