For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்? அக்தர் அதிரடி!

கராச்சி : கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் மூலம் நிவாரண நிதி திரட்டலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறி உள்ளார்.

Recommended Video

கொரோனா நிவாரண நிதி... இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடத்தலாம்

கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளும் கடும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. இரு நாடுகளிலும் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022க்கு தள்ளி வைப்பு.. சிக்கலை தீர்க்க அதிரடி முடிவு!உலக தடகள சாம்பியன்ஷிப் 2022க்கு தள்ளி வைப்பு.. சிக்கலை தீர்க்க அதிரடி முடிவு!

இந்தியா - பாகிஸ்தான் தொடர்

இந்தியா - பாகிஸ்தான் தொடர்

இந்த நிலையில் தான் நீண்ட காலமாக நடக்காத இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு தொடரை நடத்தி நிதி திரட்டலாம் என அதிரடி யோசனையை கூறி உள்ளார் சோயப் அக்தர். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாரண நிதி போட்டி

நிவாரண நிதி போட்டி

2007இல் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. இரு நாடுகளும் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே ஆடி வருகின்றன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதி திரட்டுவதன் மூலம் இருதரப்பு தொடர் உறவை மீண்டும் துவங்கலாம் என யோசனை கூறி உள்ளார் சோயப் அக்தர்.

கோபம் இருக்காது

கோபம் இருக்காது

"இந்த மோசமான காலத்தில், நான் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை முன்மொழிகிறேன். இந்த தொடரில் முதன்முறையாக இரு நாடுகளின் ரசிகர்களும் எந்த முடிவு வந்தாலும் கோபம் அடைய மாட்டார்கள்" என கூறினார் சோயப் அக்தர்.

இரு நாடுகளுக்கும் மகிழ்ச்சி

இரு நாடுகளுக்கும் மகிழ்ச்சி

"ஒருவேளை விராட் கோலி சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் ஆசாம் சதம் அடித்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். களத்தில் என்ன நடந்தாலும் இரு அணிகளும் வெற்றி பெறுவார்கள்." என இரு நாட்டு உறவும் மேம்படும் என கூறினார் அக்தர்.

அதிக பார்வையாளர்கள்

அதிக பார்வையாளர்கள்

"இந்த போட்டிகளின் மூலம் மிக அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள். முதன் முறையாக இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராக மோதுவார்கள். திரட்டப்படும் நிதி எவ்வளவு இருந்தாலும், அதை சரி சமமாக இந்தியா - பாகிஸ்தான் அரசுகளிடம் இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராட அளிக்கலாம்." எனவும் கூறினார் அக்தர்.

இது சாத்தியமா?

இது சாத்தியமா?

அக்தர் சொல்வது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், கொரோனா வைரஸ் காரணமாக இரு நாடுகளும் லாக்டவுன் அறிவித்துள்ளன. இரு நாடுகளிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. ஒருவேளை கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்தால், இந்த தொடரை நடத்தி நிதி திரட்டலாம். ஆனால், அதற்கு இரு நாடு அரசுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 9, 2020, 10:05 [IST]
Other articles published on Apr 9, 2020
English summary
Shoaib Akhtar propeses India vs Pakistan three match ODI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X