For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க மட்டும் தான் திட்டுவாங்களா? எனக்கும் திட்டத் தெரியும்.. சேவாக், கம்பீரை சீண்டிய பாக். வீரர்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் சம்பந்தமே இல்லாமல் முன்னாள் இந்திய வீரர்கள் வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீரை வம்புக்கு இழுத்துள்ளார்.

Recommended Video

IPL 2020 in UAE? BCCI yet to take a call

சமூக வலைதளம் ஒன்றில் பேட்டி அளித்த சோயப் அக்தர், டிவியில் பேசும் போது சேவாக் மற்றும் கம்பீர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும், தனக்கும் அப்படி பேசத் தெரியும் எனவும், இருந்தாலும் குழந்தைகள் இதை பார்ப்பதால் தான் பேசவில்லை எனவும் கூறி இருக்கிறார்.

ஐபிஎல் திறமையான பல வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்திருக்கு... அமித் மிஸ்ராஐபிஎல் திறமையான பல வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்திருக்கு... அமித் மிஸ்ரா

சோயப் அக்தர் செம பிஸி

சோயப் அக்தர் செம பிஸி

சோயப் அக்தர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறதோ, இல்லையோ செம பிஸியாக இருக்கிறார். தனக்கென யூட்யூப் சேனல் வைத்துள்ள அவர் கிரிக்கெட் போட்டிகளை விமர்சித்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸால் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை.

சர்ச்சை பேச்சுக்கள்

சர்ச்சை பேச்சுக்கள்

இந்த நிலையிலும், தொடர்ந்து வீடியோக்கள் பகிர்ந்து வரும் அவர் கிரிக்கெட்டில் யார், யாரை எல்லாம் விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சனம் செய்து வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வௌவால், பூனை, நாய் சாப்பிடும் சீன மக்களையும் விளாசி இருக்கிறார்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த நிலையில் சமூக வலைதளமான ஹெலோ செயலியில் சோயப் அக்தரின் பேட்டி நேரலையில் ஒளிபரப்பானது. அதில் சம்பந்தமே இல்லாமல் வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீரை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

சேவாக், கம்பீர் பற்றி என்ன சொன்னார்?

சேவாக், கம்பீர் பற்றி என்ன சொன்னார்?

சேவாக் மற்றும் கம்பீர் நேரில் நல்ல மனிதர்கள் தான். மனித நேயம் கொண்டவர்கள். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என அவர்களை பற்றி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் சோயப் அக்தர்.

நானும் அப்படி பேசுவேன்

நானும் அப்படி பேசுவேன்

மேலும், நானும் மோசமான வகையில் பேசுவேன். அவர்களை திட்டி பேச முடியும். ஆனால், நான் அந்த விஷயங்களை எல்லாம் சொல்ல மாட்டேன். ஏனெனில், குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என கூறி இருக்கிறார் சோயப் அக்தர்.

எப்போது அப்படி பேசினார்கள்?

எப்போது அப்படி பேசினார்கள்?

வீரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் இருவரும் பாகிஸ்தான் வீரர்கள் சிலரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஆனால், சோயப் அக்தர் சொல்வது போல மோசமான வகையில் எல்லாம் பேசியது இல்லை. இதில் சேவாக், சோயப் அக்தரை பல முறை கிண்டல் செய்துள்ளார்.

சம்பந்தமே இல்லாமல் சீண்டல்

சம்பந்தமே இல்லாமல் சீண்டல்

மற்றபடி சேவாக், கம்பீர் மோசமாக பேசியதாக தெரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் அவர்கள் கூறியதாக எதையோ சொல்லி சீண்டி இருக்கிறார் சோயப் அக்தர். இதுவும் சர்ச்சை ஆகி உள்ளது. இதே பேட்டியில் தோனி குறித்தும் பேசி உள்ளார்.

தோனி பற்றி கருத்து

தோனி பற்றி கருத்து

2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரை இறுதியில் தோல்வி அடைந்த உடன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்க வேண்டும் என கூறி உள்ளார் சோயப் அக்தர். இதுவும் தேவையற்ற கருத்தாகவே அமைந்துள்ளது.

Story first published: Monday, May 11, 2020, 13:11 [IST]
Other articles published on May 11, 2020
English summary
Shoaib Akhtar says he could also abuse Sehwag, Gambhir before he said both of them talking whatever comes to their mouth in TV.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X