For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானமா இருக்கு.. ஐசிசி செய்த காரியம்.. விளாசித் தள்ளிய சோயப் அக்தர்!

கராச்சி : ஐசிசி அறிவித்த பத்தாண்டுகளுக்கான உலக டி20 அணியில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இடம் பெறவில்லை.

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் அதை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

அது உலக டி20 அணி அல்ல, ஐபிஎல் அணி என ஐசிசி அமைப்பை விளாசி இருக்கிறார் அவர்.

விருதுகள்

விருதுகள்

2011 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளுக்கான விருதுகள் மற்றும் சிறந்த வீரர்கள் அடங்கிய அணியை ஐசிசி தேர்வு செய்தது. அதில் பாகிஸ்தான் வீரர்களை எங்குமே காணவில்லை என்பது பெரிய விவாதமாக மாறி உள்ளது.

பாபர் ஆசாம்

பாபர் ஆசாம்

பாகிஸ்தான் டி20 அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் பாபர் ஆசாம். அவர் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் அதிக பேட்டிங் சராசரியும் வைத்துள்ளார். எனினும், அவருக்கு உலக டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

உலக டி20 அணி

உலக டி20 அணி

ஐசிசி தேர்வு செய்த உலக டி20 அணி - ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில், ஆரோன் பின்ச், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், தோனி (கேப்டன்), கீரான் பொல்லார்டு, ரஷித் கான், பும்ரா, லசித் மலிங்கா

மறந்துவிட்டது

மறந்துவிட்டது

இது பற்றி பேசி உள்ள ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணியும், உறுப்பு நாடு என்பதையும், அவர்களும் டி20 கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்பதையும் ஐசிசி மறந்துவிட்டது என நினைக்கிறேன். ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாபர் ஆசாம்-ஐ அவர்கள் தேர்வு செய்யவில்லை என்றார்.

அவமானமாக உள்ளது

அவமானமாக உள்ளது

டி20 கிரிக்கெட்டில் பாபர் ஆசாம்-ஐ விட பெரிய வீரர் இல்லை. விராட் கோலியுடன் ஒப்பிட்டால் கூட அவரது சராசரி அதிகம். இது மிகவும் அவமானமாக உள்ளது. இந்த வீடியோவை பார்த்த உடனாவது அவர்கள் ஐபிஎல் டீம் எடுப்பதை விடுத்து உலக அணியை எடுக்க வேண்டும் என நினைப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அக்தர்.

Story first published: Monday, December 28, 2020, 17:13 [IST]
Other articles published on Dec 28, 2020
English summary
Shoaib Akhtar slams ICC for not including Babar Azam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X