For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 சீனியர் வீரர்கள் பேட்டால் அடிக்க வந்தாங்க.. 10 பேர் மன்னிப்பு கேட்டாங்க.. ஷோயப் அக்தர் தடாலடி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தன் சுயசரிதையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் தன்னை மோசமாக நடத்தியதாக அதிர்ச்சியூட்டும் புகார்களை கூறி உள்ளார்.

அதை சம்பந்தப்பட்ட முன்னாள் வீரர்கள் மியான்தத், இம்ரான் பார்ஹட் உள்ளிட்டோர் மறுத்து வரும் நிலையில், மற்றொரு முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், அப்ரிடிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார். ஷோயப் அக்தர் தன் பங்கிற்கு சில தடாலடி புகார்களை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

Shoaib Akhtar supports Shahid Afridi, says treated harsh by seniors

அப்ரிடி புத்தகம் குறித்து பேசிய அக்தர், "அப்ரிடி ஆடிய போது, மூத்த வீரர்கள் மோசமாக நடத்துவது குறித்து அந்த புத்தகத்தில் கொஞ்சம் தான் கூறியுள்ளார். நான் கண்கூடாக சிலவற்றை பார்த்துள்ளேன். அவர் சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன்" என்று கூறி தனக்கு நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த ஐபிஎல் தொடரிலும் சொதப்பிய கோலி அணி.. காரணத்தை புட்டு.. புட்டு.. வைத்த அனில் கும்ப்ளே! இந்த ஐபிஎல் தொடரிலும் சொதப்பிய கோலி அணி.. காரணத்தை புட்டு.. புட்டு.. வைத்த அனில் கும்ப்ளே!

தன்னை மோசமாக நடத்திய பத்து வீரர்கள் பின்னர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முன் தன்னிடம் தங்கள் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டதாக கூறினார் அக்தர்.

ஒருமுறை ஆஸ்திரேலிய தொடரின் போது நான்கு சீனியர் வீரர்கள் பேட்டால் தன்னை அடிக்கும் எண்ணத்தோடு வந்தார்கள் எனவுக் கூறியுள்ளார். அவர்கள் மன்னிப்பு கேட்ட பத்து வீரர்கள், அடிக்க வந்த நான்கு வீரர்கள் பெயரை அக்தர் குறிப்பிடவில்லை.

Story first published: Thursday, May 9, 2019, 17:28 [IST]
Other articles published on May 9, 2019
English summary
Shoaib Akhtar supports Shahid Afridi, says treated harsh by seniors
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X