மாலிக் - சானியாவின் குழந்தை படத்தை லீக் செய்த ரசிகர்.. குபீரென்று சிரித்த மாலிக்

இஸ்லாமாபாத்: இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது.

சானியா மிர்சாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயப் மாலிக், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தன் ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.

இதையடுத்து வாழ்த்துக்கள் மற்றும் குழந்தை பற்றிய பதிவுகள் அதிகம் வலம் வந்தன. குழந்தை புகைப்படம் கிடைக்குமா என சிலர் காத்திருந்த நிலையில், ரசிகர் ஒருவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்து கோபப்படாமல் சிரித்துக் கொண்டு இருக்கிறார் ஷோயப் மாலிக்.

[யானை பொம்மை டிரஸ் போட்டுக் கொண்டு சானியா கொண்டாடிய பார்ட்டி.. படங்கள் இதோ]

அந்த படம் இதுதான்

அந்த ரசிகர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஷோயப் மாலிக், சக வீரர் பாபர் ஆஸாமை கையில் சுமந்து கொண்டு இருக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அது கிரிக்கெட் போட்டியின் இடையே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். பாபர் ஆஸாமை ஒரு குழந்தையை சுமந்து கொண்டு செல்வது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளதால், அந்த ரசிகர் கேலி செய்யும் வகையில் இதை பதிவிட்டுள்ளார்.

சிரிப்பை வரவழைத்த பதிவு

சிரிப்பை வரவழைத்த பதிவு

இதைக் கண்ட ஷோயப் மாலிக் தனக்கு இந்த பதிவு சிரிப்பை வரவழைப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தாங்கள் இன்னும் குழந்தையின் புகைப்படத்தை எங்கும் பகிரவில்லை என விளக்கமும் கொடுத்துள்ளார்.

குழந்தையின் பெயர் என்ன?

ஷோயப் மாலிக், சானியா மிர்சா தம்பதியின் ஆண் குழந்தைக்கு "இஸ்ஸான்" என பெயரிட்டுள்ளனர். தங்கள் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார் மாலிக்.

பெயரில் மிர்சா மாலிக்

பெயரில் மிர்சா மாலிக்

சானியா மிர்சா முன்பு ஒருமுறை மாலிக்கிடம் கூறுகையில், தங்களுக்கு குழந்தை பிறந்தால் குழந்தையின் பெயரோடு தந்தை பெயரான மாலிக் மட்டுமல்லாமல், தாயின் பெயரான மிர்சா என்பதையும் சேர்த்து "மிர்சா மாலிக்" என்றே அழைக்க வேண்டும் என கூறி இருக்கிறார். மாலிக் தன் ட்விட்டர் பதிவில் #BabyMirzaMalik என்றே பதிவிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shoaib malik - Sania mirza baby picture leaked and made malik laugh a lot
Story first published: Thursday, November 1, 2018, 20:07 [IST]
Other articles published on Nov 1, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X